விஜயின் ‘கோட்’ படத்தின் மூணாவது பாடல் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள்.
லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கோட் படத்தின் மூன்றாவது பாடல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோட் படத்தின் பாடல்கள்:
ஏற்கனவே இந்த படத்தினுடைய இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோட் படத்தினுடைய முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘கோட்’ படத்திலிருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலை விஜய் பாடி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருக்கிறது.
Ajith Fans in TL after listening #Spark Song #Goat3rdSingle .. pic.twitter.com/HbagHceQ0x
— David ®• (@DavidVj007) August 3, 2024
மூன்றாவது பாடல்:
மறைந்த பாடகி பவதாரணி குரல் ஏஐ மூலம் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்கள். இதற்கு ‘TimelessVoices.ai’ என்ற நிறுவனம் உதவி இருக்கிறது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் கோட் படத்தின் உடைய மூன்றாவது பாடல் இன்று மாலை வெளியாகி இருக்கிறது. இப்பாடலுக்கு ‘ஸ்பார்க்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலு இணைந்து பாடி இருக்கிறார்கள்.
பாடல் குறித்த விமர்சனம்:
இந்த பாடலிற்கு கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். மேலும், இந்த பாடலில் விஜய் மிகவும் இளமை தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும் பாடலில் வரும் விஜய், அவரைப் போல் இல்லை என்று இணையவாசிகள் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.
படம் குறித்த தகவல்
இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.