தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடகர், திரைப்பட பாடலாசிரியர், இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.
சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது படம் ஆகும்.

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்தது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இது தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ், வெங்கடேஷ், ரம்யா ரங்கநாதன், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம்ல் :
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா ரங்கநாதன். குறிப்பாக, இந்த படத்தில் கோல்டன் ஸ்பேரோ பாடலில் 'எக்ஸாம்ல ஃபெயில் ஆனாலும் வெக்ஸ் ஆக மாட்டேன்' என்ற வரிகளுக்கு ரம்யா மாசாக நடனம் ஆடி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரம்யா ரங்கநாதன், என்னோட டான்ஸ் ஸ்டெப்புக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

ரம்யா ரங்கநாதன் பேட்டி:
ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எல்லோரும் என்னுடைய டான்ஸை பார்த்து பாராட்டி கமெண்ட் பண்ணுவதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. இது எல்லா கிரிடீட்டும் தனுஷ் சாருக்கு தான் போய் சேரனும். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். என்னுடைய வீட்டுக்கு நான் ஒரே ஒரு பொண்ணு. நான் ரெண்டு மாசம் குழந்தையாக இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். ஒரு சிங்கிள் பேரன்ட்டா அம்மா தான் என்னை வளர்த்தார். அம்மாவோட சூழலை புரிந்து கொண்டு நான் நன்றாக படித்தேன். அதே மாதிரி டான்ஸ் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஐந்து வயதில் இருந்தே நான் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

சினிமா வாய்ப்பு:
ஸ்கூல், காலேஜ் எல்லாம் டான்ஸ் போட்டியில் கலந்து இருக்கிறேன். அதேநேரம் படிப்பிலும் ரொம்ப பர்ஃபெக்டாக இருப்பேன். நான் இன்ஜினியரிங் படித்து முடித்து இருக்கிறேன். அண்ணா யுனிவர்சிட்டியில் ரேங்க் ஹோல்டராக வந்தேன். அதற்கு பிறகு நான் எம்பிஏ முடித்தேன். அது முடித்ததுமே ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் ஆடிட்டராக ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். என்னுடைய டான்ஸ் டச் விடக்கூடாது என்று நிறைய ரீலீஸ் பண்ணி இன்ஸ்டாவில் போஸ்ட் பண்ணுவேன். அதை பார்த்துட்டு தான் தனுஷ் சார் என இந்த படத்தில் நடிக்க கூப்பிட்டார். எல்லோரும் என்னுடைய டான்ஸ்சை மட்டும் இல்லாமல் நடிப்பையும் பாராட்டி இருந்தார்கள்.

தனுஷ் குறித்து சொன்னது:
தனுஷ் சார் எப்போதுமே திறமையானவர்களை கண்டுபிடித்து ஊக்கப்படுத்துவார். அவர்களுக்கு எப்பவும் அங்கீகாரமும் கொடுப்பார். என்னுடைய கதாபாத்திரத்தை ஹோட்டல் மேனேஜராகத் தான் தனுஷ் சார் எழுதி இருந்தார். ஆனால், ஹோட்டல் மேனேஜர் டான்ஸ் ஸ்டெப் போட்டால் நல்லா இருக்காது என்று தான் மேரேஜ் ஈவன் பிளானரா மாற்றி எழுதினார். அந்த பாட்டு 15 நிமிடத்தில் காத்துக் கொண்டு ஆடியது. நான் சிங்கிள் டேக்கில் ஆடினேன். அதை பார்த்து தனுஷ் சார் எழுந்து நின்று கைதட்டி பாராட்டி இருந்தார். தனுஷ் சார் ரொம்ப பெரிய நடிகர், மல்டி டேலண்ட் உள்ளவர். சிம்ரன், ரித்திக் ரோஷன் போல டான்ஸ் நடிப்பிலும் கெட்டிக்காரத்தனமாக வரணும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதே மாதிரி என்னோட ஆல் டைம் பேவரைட் ஹீரோ என்றால் மாதவன் சார் தான் என்று பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்து இருக்கிறார்.






