முதல் மனைவி விவாகரத்து, 43 வயதில் இளம் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த கோலி சோடா பட நடிகர்.

0
48436
goli
- Advertisement -

மலையாள திரையுலகில் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘நாயகன்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக இந்திரஜித் சுகுமாரன் நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ். இது தான் நடிகராக செம்பன் வினோத் ஜோஸ் அறிமுகமான முதல் மலையாள திரைப்படமாம்.

-விளம்பரம்-
Chemban Vinod Jose
முதல் மனைவி

இதனைத் தொடர்ந்து ‘சிட்டி ஆஃப் காட், பாம்பே மார்ச் 12, கலெக்டர், ஃப்ரைடே, கிளி போயி, ஆர்டினரி, சார்லி, கலி, ஒப்பம், ஜல்லிக்கட்டு, பிக் பிரதர்’ போன்ற பல மலையாள படங்களில் நடித்தார் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ். அதன் பிறகு மலையாள திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார்.

- Advertisement -

தமிழ் திரையுலகில் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘கோலி சோடா 2’. இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இதில் சமுத்திரக்கனி, கெளதம் வாசுதேவ் மேனன், பரத் சீனி, வினோத் ஆகியோர் கதையின் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் ‘தில்லை’ என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார்.

View this post on Instagram

JUST MARRIED ????.

A post shared by Chemban Vinod Jose (@chembanvinod) on

இது தான் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் தமிழ் சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். 2018-ஆம் ஆண்டு நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், சுனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான் க்ரிஸ் செம்பன் என்ற மகன் உள்ளார். அதன் பிறகு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் செம்பன் வினோத் ஜோஸ்.

-விளம்பரம்-

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், மரியம் தாமஸ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளி வந்திருக்கிறது. இத்தகவலை நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

Advertisement