‘த்தூன்னு, துப்பிட்டு போய்ட்டா’ – கோலி சோடா படத்தில் ATM கதாபாத்திரத்தில் நடித்த பெண்ணை தேர்வு செய்த போது ஏற்பட்ட அவமானம் குறித்து விஜய் மில்டன்.

0
509
- Advertisement -

கோலி சோடா படத்தில் ஏடிஎம் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்த கதை குறித்து இயக்குனர் விஜய் மில்டன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் தான் “கோலி சோடா”. இப்படத்தில் “பசங்க” படத்தில் நடித்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.4 சிறுவர்கள், 2 சிறுமிகளை சுற்றி நடக்கும் கதை தான் கோலி சோடா படம்.

-விளம்பரம்-

இப்படம் வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்றது. மேலும், இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தவர் சீதா. வேற யாரும் இல்லைங்க, இவரை ஏடிஎம் என்று தான் அழைப்பார்கள். அவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த படத்தில் ஒல்லியான தோற்றம், சோடாபுட்டி கண்ணாடி என்று அவருடைய தோற்றமே வித்தியாசமாக இருந்தது.

- Advertisement -

சீதா குறித்த தகவல்:

அதற்குப்பின் இவர் பத்து என்றதுக்குள்ள போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும் இவருடைய ஏடிஎம் கதாபாத்திரம் தான் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட சீதா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், திரைப்பட வாய்ப்பு கிடைக்காதது குறித்தும் தன்னுடைய தாழ்வு மனப்பான்மை எண்ணம் குறித்து எல்லாம் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

விஜய் மில்டன் பேட்டி:

இந்த நிலையில் கோலி சோடா படத்திற்கு ஏடிஎம் கதாபாத்திரத்தை தேர்வு செய்தது குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் விஜய் மில்டன் கூறியிருப்பது, ஏடிஎம் கண்டுபிடித்த கதையே ஒரு பெரிய கதைதான். அவளுடைய கதாபாத்திரம் தான் அந்த கதையை தூக்கி நிறுத்துவது. அனைவரையும் கனெக்ட் பண்ணும் ஒரு கதாபாத்திரம் என்பதால் அந்த பெண்ணை ஃபர்ஸ்ட் பார்த்ததுமே பிடிக்கக் கூடாது, பார்க்க பார்க்க தான் பிடிக்கணும் என்று தனுஷ் பட டயலாக் சொல்லி ஒரு பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என்று வலை வீசி தேடினோம்.

-விளம்பரம்-

atm கதாபாத்திரம் குறித்து சொன்னது:

பின் ஒவ்வொரு எக்ஸ்போர்ட் வெளியே நில்லுங்க என்று அனுப்பி விட்டாங்க. மாலை 5 மணிக்கு எக்ஸ்போர்ட் விடும் போது அங்கே வாசலில் நின்று இந்த கதைக்கு பொருந்துகிற மாதிரி ஏதாவது ஒரு பொண்ணை பார்த்தால் நம்மளோட ஆபீஸ் நம்பரை கொடுத்து நடிக்க விருப்பம் இருந்தால் போன் பண்ணி சொல்லுங்க என்று அனுப்பி விட்டாங்க. அப்படி ஒரு நாள் நான் மார்க்கெட்டில் நின்று கொண்டிருக்கும் போது அந்த பொண்ணு ஸ்கூல் யூனிபார்ம் போட்டு கொண்டு விறு விறு விறு என்று நடந்து போய்க்கொண்டிருந்தாள்.

சீதா செய்த வேலை:

இந்த பொண்ணு ஏடிஎம் கதாபாத்திரத்துக்கு கரெக்ட்டா இருப்பா என்று தோணுச்சு. பின் என்னுடைய புல்லட்டை எடுத்துக் கொண்டு பின்னாடியே போனேன்.எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது என்று எனக்கு புரியவில்லை. அப்புறமா ஒரு இடத்தில் போய் மடக்கி நிறுத்திட்டேன். அந்த பெண்ணிடம் போய், என்னுடைய பெயர் மில்டன். இது என்னோட நம்பர். எனக்கு போன் பண்றியா? என்றவுடன் என்னை அப்படியே பாத்துட்டு தூ என்று துப்பிட்டு போயிட்டா. அதற்குப் பிறகுதான் படத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி நடிக்க வைத்தோம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement