காஷ்மீரை பாலஸ்தீனத்தோடு ஒப்பிட்டு பிரகாஷ்ராஜ் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடி கட்டி பறப்பவர் பிரகாஷ்ராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் ‘டூயட்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
பின் தனது நடிப்பால் குறுகிய நாட்களிலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். பெரும்பாலும் பிரகாஷ் ராஜ் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் தான் கலக்கி இருக்கிறார். அதிலும், சமீப காலமாக பிரகாஷ் ராஜ் அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார்.
பிரகாஷ் ராஜ் குறித்த தகவல்:
இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவர் சமீப காலமாகவே பாஜக, மோடிக்கு எதிரான கருத்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இது குறித்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதோடு இவர் சோசியல் மீடியாவில் எப்போதும் பரபரப்பான அரசியல் கருத்துக்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
Prakash Raj compares Palestine with Kashmir- Says give them their land pic.twitter.com/d28WIaf0pC
— Megh Updates 🚨™ (@MeghUpdates) February 18, 2024
பிரகாஷ் ராஜ் வீடியோ:
சில சமயங்களில் இவர் பதிவிடும் அரசியல் கருத்துக்கள் விவாத பொருளாகவும் சர்ச்சையாகவும் மாறியிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் பிரகாஷ்ராஜ் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது இவர் பேசிய விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது, பாலஸ்தீனத்திற்கு நீதி கிடைத்து இருக்கிறது. நமக்கு தேவை நீதி தான். நாம் நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது.
பாலஸ்தீனம் குறித்து சொன்னது:
நிலைப்பாடு எடுப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. நீங்கள் அவர்களுக்கான நிலத்தை அவர்களிடம் திருப்பி கொடுங்கள் அவ்வளவுதான். அவர்கள் கண்ணியத்துடன் அங்கு எப்படி வாழ்கிறார்கள் என்பது உங்களுக்கு தேவையில்லாத ஒன்று. நாம் எப்படி இருக்கிறோம், நம்ம பெரிய ஆளாக இருக்க நினைக்கிறோம் என்றால் காஷ்மீரில் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறோம். அதை நாம் செய்யக்கூடாது.
நெட்டிசன்கள் விமர்சனம்:
நாம் எப்பொழுதும் நீதியை நிலை நாட்ட வேண்டும் என்று பேசி இருக்கிறார். இப்படி பிரகாஷ்ராஜ் பேசியது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கூறும் வகையில் இருப்பதாக சோசியல் மீடியாவில் பலருமே கண்டனங்கள் தெரிவித்தும் அவரை திட்டியும் வருகிறார்கள். தற்போது பிரகாஷ்ராஜுடைய வீடியோ தான் சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்திருக்கிறது.