அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகயிருக்கும் படத்தின் அப்டேட் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.
கடைசியாக அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். ஏற்கனவே அஜித்- திரிஷா இருவரும் இணைந்து ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்கள்.
விடாமுயற்சி படம்:
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
இவர்களுடன் இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இதற்கிடையில் விடாமுயற்சி கலை நடிகர்கள் மிலன் மாரடைப்பால் இறந்தார். இதனால் விடாமுயற்சி படகுழுவினருக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. அவருடைய மறைவிற்கு பிறகு பட வேலைகள் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை 60% படப்பிடிப்பு முடிந்து விட்டது.
அஜித்தின் 63வது படம்:
இன்னும் 35 நாட்களுக்குள் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதை எடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இது அஜித்தின் 63வது படமாகும். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இவர் ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா, பகிரா, மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் குறித்த அப்டேட்:
அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் நாளை அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு Good Bad Ugly படத்தினுடைய பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து இந்த படத்தினுடைய சூட்டிங் தொடங்குகிறது. அதோட இந்த படத்தில் சிம்ரன், மீனா நடிப்பதாக கூறப்படுகிறது.
அஜித் பிறந்தநாள் ஸ்பெசல்:
அதுமட்டுமில்லாமல் தெலுங்கு பட நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார் என்றெல்லாம் கூறப்படுகிறது. மேலும் இந்த குட் பேட் அக்லி படத்தின் கதையில் இயக்குனர் அதிக கவனம் செலுத்தி எடுத்து இருக்கிறார். அஜித்திற்கும் இந்த கதை முழுமையாக பிடித்து விட்டதால் படப்பிடிப்புக்கு செல்லலாம் என்று கூறி இருக்கிறார். அதோட இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் வெளியாகவில்லை. மேலும், அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த தீனா, பில்லா ஆகிய படங்களை நாளை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.