ஷூட்டிங்கில் நானும் அர்ஜுன் இப்படித்தான் இருப்போம் – குட் பேட் அக்லி நாயகி ப்ரியா வாரியார் சொன்னது

0
63
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே குட் பேட் அக்லி படம் தான். தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. அஜித்தின் பேன் பாயாக ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படம் தாறுமாறாக இருக்கிறது. மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

- Advertisement -

குட் பேட் அக்லி படம்:

இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பிரியா வரியா நடனமாடிய காட்சி எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஒரு அடார் லவ் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் பிரியா வாரியார் இளசுகள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனார் என்று சொல்லலாம். இதுவரை படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே உலக அளவில் இந்த படம் 148.50 கோடி வசூலை செய்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரியா வாரியர், மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது நினைத்து சந்தோஷமாக இருக்கிறது.

ப்ரியா வாரியார் பேட்டி:

மீண்டும் தமிழ் சினிமாவில் இப்படி ஆன ஒரு அடையாளம் கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் சிம்ரன் மேம் டான்ஸ் ஆடின பாடலை தான் ரீ கிரியேட் பண்ணி டான்ஸ் பண்ண போறோம்னு சொன்னதுமே நான் பிரஷர் எடுத்துக்க கூடாது என்று நினைத்தேன். என்னால் கண்டிப்பாக சிம்ரன் மாதிரி பண்ண முடியாது. இருந்தாலும் அவர்களைப் போல முடிந்த அளவுக்கு கொடுக்கணும் என்று தான் என்னுடைய எண்ணமாக இருந்தது. மேம் பண்ண மாதிரியே க்யூடாக என்னுடைய ஸ்டைலில் பண்ணனும் என்று திட்டமிட்டு செய்தேன். படம் வெளிவந்த பிறகு அந்த காட்சி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது சந்தோஷமாக இருக்கிறது.

-விளம்பரம்-

டான்ஸ் பற்றி சொன்னது:

சிம்ரன் மேம் அதை பார்த்துவிட்டு எனக்கு ரிப்ளை பண்ணி இருந்தார். அவர், என்னுடைய பெர்பார்மன்ஸ் நன்றாக இருக்கிறது என்று மெசேஜ் பண்ணினார். நான் முதலில் ஸ்டண்ட் காட்சிகள் செய்ய பயந்தேன். சுந்தர் மாஸ்டர் தான் எனக்கு நம்பிக்கையை கொடுத்தார். மேலும், படத்தில் நானும் அர்ஜுன் தாஸுமே பயங்கர ஃபண் பண்ணிக் கொண்டிருப்போம். அவர் இரட்டை வேடத்தில் நடிப்பதால் ரொம்ப பரபரப்பாக இருப்பார். சொல்லப்போனால் ஒரு ஷார்ட் முடித்துவிட்டு உடனடியாக மற்றொரு கதாபாத்திரத்திற்கு தயாராகுவதற்கு வேகமாக போய்க் கொண்டிருப்பார். நடித்து முடித்து வந்தாலுமே அவர் ரொம்ப ஜாலியாகத்தான் இருப்பார்.

அஜித் பற்றி சொன்னது:

அஜித் சாரோட நடவடிக்கையில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற எண்ணமே வராது. எல்லோருமே சமமானவர்கள் என்று தான் அவர் நினைப்பார். அவரிடம் இருக்கிற ஸ்பெஷல் அது தான். நான் திரைப்படம் வெளி வந்த அன்று சென்னையில் தான் இருந்தேன். இயக்குனர் ஆதிக் சென்னையில் படம் பார்க்கச் சொன்னார். நான் கேரளாவில் திரிச்சூர் பகுதியில் இருந்து வரேன். அங்க திரிச்சூர் பூரம்னு என்று ஒரு கொண்டாட்டம் நடக்கும். அந்த மாதிரி தான் படத்தோட முதல் காட்சி இருந்தது என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement