நானும் என் மனைவியும் குள்ளமாக பிறக்க காரணம் இதான். கூகுள் குட்டப்பாவில் ரோபோவாக நடித்த நடிகர் தன் மனைவியுடன் அளித்த பேட்டி.

0
2190
ilambarathi
- Advertisement -

கூகுள் குட்டப்பாவில் ரோபோட்டாக நடித்த நடிகர் இளம் பாரதி பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இருவரின் இயக்கத்தில் வெளியாகியிருந்த படம் கூகுள் குட்டப்பா. இந்தப் படத்தில் தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா, மாரியப்பன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். மேலும், கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தை தயாரித்து நடித்தும் இருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் ரோபோவாக நடித்தவர் நடிகர் இளம்பாரதி. இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் தன்னுடைய வாழ்க்கை குறித்தும், திரைப்பயணம் குறித்தும் கூறியிருப்பது, என்னுடைய ஊர் ஆவடி பக்கத்தில் ஒரு கிராமம். பிறந்தேன் ஆனால், நான் வளரவில்லை. அது கடவுள் செய்த வினை. என்னுடைய மனைவி பொம்மி. இவரும் இவர் சென்னையை சேர்ந்தவர். நாங்கள் மொத்தம் ஐந்து பேர். ஆண்கள் 3 பெண்கள் 2. எண்ணுடன் நடுவில் பிறந்தவர்கள் உயரமாக இருப்பார்கள். நானும் என்னுடைய இன்னொரு சகோதரரும் உயரம் குறைந்து பிறந்துவிட்டோம். அதேபோல் என் மனைவியின் குடும்பத்திலும் 3 பேர் உயரமாக உள்ளார்கள்.

- Advertisement -

நடிகர் இளம் பாரதி அளித்த பேட்டி:

3 பேர் உயரம் குறைவாக இருக்கிறார்கள். இப்படி உயரம் குறைவாக பிறப்பதற்கு காரணம் சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வதுதான். என்னுடைய அம்மா, அப்பா இருவரும் சொந்தக்காரர்கள். அதேபோல் என் மனைவியின் வீட்டிலும் சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இதனால் ஜீன், ஹார்மோன்கள் குறைபாடு ஏற்பட்டு வயிற்றில் இருக்கும் போதே வளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது. நான் 10 வயசு வரைக்கும் எனக்கு இந்த பிரச்சனை தெரியவில்லை. பத்து வயதுக்குப் பிறகுதான் நான் வளரமாட்டேன் என்பது தெரிந்தது. அதற்கு பிறகு என்னுடைய பெற்றோர் மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் பார்த்தார்கள்.

உயரம் குறைவுக்கு காரணம்:

ஆயிரம் ரூபாயில் தலையில் ஒரு ஊசி போட வேண்டும். அப்படி போட்டால் ஒரு இன்ச் வளருவேன் என்று சொன்னார்கள். அப்போது பணப் பற்றாக்குறையின் காரணமாக என்னால் அந்த ஊசி போட முடியாமல் போனது. அதேபோல் என் மனைவி குடும்பத்திலும் பணப் பற்றாக்குறையின் காரணமாக அந்த ஊசி போட முடியாமல் போனது. பிறகு நாங்கள் அதை விட்டுவிட்டு எங்களுடைய வாழ்க்கை பார்க்க தொடங்கினோம். பலரும் எங்களுடைய உயரத்தை பார்த்து கிண்டல் கேலி செய்திருக்கிறார்கள். கேட்டு கேட்டு எங்களுக்கு பழகிவிட்டதால் நாங்கள் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை,. எங்கள் வாழ்க்கையை நோக்கி நாங்கள் ஓடிக் கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் நான் சினிமாவில் ஒரு ஆபிசில் கிளர்க்காக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

-விளம்பரம்-

உயரம் குறைவானவர்களின் வேண்டுகோள்:

அதன் மூலம் தான் எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படியே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்து சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இருந்தாலும் சினிமா என்பது நிரந்தரம் இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கும், உயரம் குறைவான எங்களை மாதிரி நபர்களுக்கும் ஒரு நிரந்தரமான வேலை வேண்டும். இது குறித்து நாங்களும் பல முகாம், அதிகாரிகளிடமும் மனு கொடுத்திருக்கிறோம். நான் எந்த முதலமைச்சரையும் குறை சொல்லவில்லை.

இளம் பாரதி ஆசை:

இரண்டு ஆட்சியிலுமே நாங்கள் கொடுத்த மனுவை நிராகரித்து கிண்டல் செய்து இருக்கிறார்கள். எங்களாலும் வேலை செய்ய முடியும், உழைக்க முடியும், நாங்களும் மனிதர்கள் தான், எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். இது மட்டும் தான் எங்களுடைய ஒரே கோரிக்கை. அதேபோல் எனக்கு நடனத்தில் அதிக ஆர்வம். ஆனால், உயரம் குறைவான டான்ஸ் மாஸ்டர் யாருமே கிடையாது. அதனால் என்னுடைய ஆசையை நான் விட்டு விட்டேன். ஆனால், எனக்கு இயக்கத்தின் மீது ஆசை வந்துள்ளது. ஏனென்றால், படத்தில் கேஎஸ் ரவிக்குமார் சாருடன் 25 நாட்களுக்கு மேல் பயணித்திருக்கிறேன். அவரிடம் பொறுமை, இயக்கம் என பல விஷயங்களை கற்று இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஒருநாள் நானும் இயக்குனராகுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement