தற்போதுள்ள நவீன உலகில் ஸ்மார்ட் போன் எனப்படும் ஆண்ட்ராய்ட்டு போனை பயன்படுத்துவோர் தான் மிக அதிகம். கூகுல் நிறுவனம் வெளியிட்ட இந்த ஆண்ட்ராய்ட் மென் பொருள் அறிமுகமான பின்னரே ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையையம் அதிகரித்தது.

மேலும், ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துவோர் எண்ணிகையை அதிகரிக்க கூகுள் நிறுவனம் பல்வேறு வசதிகளை அறிமுகபடுத்தி வருகிறது. அந்த வகையில் காது கேளாதவர்களுக்கு குகூள் நிறுவனம் லைவ் டிரான்ஸ்கிரைப் (Live Transcribe) மற்றும் சவுண்டு ஆம்பிலிஃவையர் (Sound Amplifier) என அழைக்கப்படும் இந்த இரண்டு புதிய உதவும் செயலிகள் அண்ட்ராய்டு போன்களில்அறிமுகம் செய்துள்ளது. லைவ் டிரான்ஸ்கிரைப் என்னும் செயலியை பொருத்தவரை காதுகேளாதவர்களுக்கு செய்திகளை டிரான்ஸ்கிரிப்ஷன் முறையில் அளிக்கும்

Advertisement

மேலும் இரண்டு மொழிகள் கலந்து பேசினாலும் அதை பயனாளிகளுக்கு உணர்த்த இந்த செயலி உதவுகிறது. ‘லைவ் டிரான்ஸ்கிரைப்’ குகுள் போன்களில் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டாவது செயலியான சவுண்டு ஆம்பிலிஃவையர் சப்தத்தை கேட்காதவர்களுக்கு மிகைப்படுத்தி கேட்கும் திரணை அதிகரிக்கும்.

சுமார் 3.1 எம்.பி அளவு கொண்டுள்ள இந்த செயலி பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடிகிறது.  அதை ஆக்டிவேட் செய்ய செட்டிங்ஸ் > அக்சஸ்பிளிட்டி > சவுண்ட ஆம்பிலிஃவையர் > சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

Advertisement
Advertisement