“அறம்” திரைப்பட இயக்குனர் கோபி நைனார் அடுத்த படத்தின் “ஹீரோ” இவர்தான்..!

0
662
Gopi
- Advertisement -

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “அறம் ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை புது முக இயக்குனர் கோபி நைனார் என்பவர் இயக்கி இருந்தார். இந்நிலையில் இவரது அடுத்த படைப்பில் நடிகர் ஜெய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Actor Jai

- Advertisement -

நடிகர் ஜெய் தற்போது “பார்ட்டி, நீயா 2 ” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் நடிகர் ஜெய். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நாளை (செப்டம்பர் 19) துவங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதே போல இயக்குனர் கோபி நைனார், நடிகர் ஆர்யாவை வைத்து ஒரு படம் இயக்கபோவதாகவும், அந்த படத்தில் நடிகர் ஆர்யா ஒரு குத்துச்சண்டை வீரராக நடிக்க இருக்கிறார் என்றும் ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகியிருந்தது.

-விளம்பரம்-

gopi nainar

இந்நிலையில் அதற்குள்ளாகவே இயக்குனர் கோபி நைனார், நடிகர் ஜெய்யுடன் புதிய படத்தில் இணைந்து விட்டார். இன்னும் இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் பற்றியும், படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் பற்றியும் எந்த வித தகவலும் வெளியாகவில்லை.

Advertisement