எல்லா பிரச்சனைக்கும் காரணம் இவங்க தான் – கோபி சுதாகர் சேனலை முடக்க சொல்லி புகார். யார் கொடுத்துள்ளது பாருங்க.

0
732
gopi
- Advertisement -

கடந்த சில வாரங்களாக தமிழ் நாட்டில் வடகர்கள் பிரச்சனை தான் கொஞ்சம் பேசுபொருலாகி வருகிறது. தமிழ் நாட்டில் நிலவி வரும் வட மாநிலத்தவரின் ஆக்கிரமிப்பு அதிகமாகியுள்ளதை சமூக ஆர்வலர்கள் முதல் அரசியல் வாதிகள் வரையில் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருப்பூரில் வட மாநிலத்தை சேர்த்தவர்கள் தமிழர்களை தாக்கியதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் மதுரை முத்து கூட வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

-விளம்பரம்-

மேலும், வெளியூர் செல்லும் ரயில்களை முன் பதிவு செய்யாமல் வடக்கர்கள் பயணம் செய்வதால் முன்பதிவு செய்யப்படுபவர்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கு எல்லாம் முன்பாக பிரபல யூடுயூர்களான கோபி சுதாகர் தங்கள் பரிதாபங்கள் யூடுயூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் வடக்கர்கள் தமிழ் நாட்டில் எப்படி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதை கேலியாக காட்டி இருந்தனர்.

- Advertisement -

அதே போல ரயிலில் டிக்கெட் இல்லாமல் வருவதையும், தமிழ் நாட்டிற்கு வந்து கம்மி சம்பளத்தில் வேலை செய்வதை பற்றியும் கேலி செய்யும் விதமாக அந்த வீடியோவில் நடித்து காட்டி இருந்தனர். இந்த வீடியோ அப்போது சமூக வலைதளத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. இப்படி ஒரு நிலையில் தமிழக்தில் வட மாநிலத்தவர்கள் தாக்படுவதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது.

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தார்கள். ஆனால், தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்றும் அது போலியான வீடியோ வேண்டும் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்களை தயார் செய்து வர பெரிதாக கோபி மற்றும் சுதாகர் மீது புகார் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

வடக்கு ரயில் பாவங்கள் என்ற தலைப்பில் கோபி சுதாகர் வெளியிட்ட அந்த குறிப்பிட்ட வீடியோவை சுட்டிக்காட்டி கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீநிவாசன் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் ‘ஒரு சில இடங்களில் நடக்கும் தவறினால் ஒட்டுமொத்தவடமாநில தொழிலாளர்கள் மீதும் வன்மத்தை ஏற்படுத்துவது தவறானது என்று குறிப்பிட்டார். இதனால், பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் ஆகியோரின் யூடியூப் சேனலை தடை செய்து தமிழக அரசு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதே போல பாரதிய ஜனதா கட்சியும் கோபி, சுதாகர் யூடியூக் சேனலுக்கு தடை விதிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அண்ணா பல்கலைக் கழகத்தில் தனியார் அமைப்பு சார்பில் கோபி சுதாகர் ஆகிய இருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.அனால், அது போலியான டாக்டர் பட்டம் என்று விசாரணையில் தெரியவர, இந்த விருதை வழங்கிய அமைப்பு மீது போலீசார் நடவடிக்கை எடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement