நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் தமிழகத்தில் தற்போது இந்த வைரஸ் தீவிரமடைந்து உள்ளது.கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே போல தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் இரண்டாம் அலை அதிகரித்து வருவதால் கடந்த 10 ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அப்போதும் மக்கள் பலர் பொது இடங்களில் பொருட்களை வாங்க முந்தியடித்தனர்.
இப்படி ஒரு நிலையில் நேற்று மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் முன்பு இருந்த பல்வேரு தளர்வுகள் நீக்கப்பட்டு கடுமையான ஊரடங்காக அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்றில் இருந்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு பிரபலங்களும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கவுண்டமணி சமீபத்தில் பேசியதாவது ,
கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள் என்று உருக்கமுடன் கூறியுள்ளார். கவுண்டமணி படங்களில் நடிப்பதை பல ஆண்டுக்கு முன்னரே நிறுத்திவிட்டார். அவருக்கு நேர்ந்த உடல் நல பிரச்சனை காரணமாக படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார் கவுண்டமணி.