‘சார், இது ஹீரோயின் கனவு பாட்டு, இதுல எப்படி நீங்க ஆட முடியும்’ – தன்னை டான்ஸ் ஆட மறுத்த AD, கவுண்டமணி கொடுத்துள்ள நக்கல் பதில்.

0
512
gentleman
- Advertisement -

ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி செய்த அட்ராசிட்டி குறித்து காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான்.

-விளம்பரம்-

அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தி இருக்கிறார். மேலும், இவருடைய கவுண்டர்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் ரஜினி, கமல் காலம் தொடங்கி தற்போது உள்ள நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் கவுண்டமணி– செந்தில் காம்போ எல்லாம் வேற லெவல்.

- Advertisement -

கவுண்டமணி திரைப்பயணம்:

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும், இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கவுண்டமணி அவர்கள் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

கவுண்டமணி குறித்த தகவல்:

மேலும், இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்து இருக்கிறார். அதோடு கவுண்டமணியை அந்த காலத்து அஜித் என்று தான் சொன்னார்கள். ஏன்னா, கவுண்டமணி அப்போதே பேட்டிகளை அதிகம் குடுப்பது இல்லை. பின் ரசிகர் மன்றங்களை கலைத்தவர். இது ஒரு பக்கம் இருக்க, கவுண்டமணி அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் என பலரிடம் காமெடியாக பேசுவது, கலாய்ப்பது, கிண்டல் செய்வது என்று இருப்பார். இது பலரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

பாலாஜி சக்திவேல் சொன்னது:

அந்த வகையில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருந்த ஜென்டில்மேன் படத்தில் அவர் செய்தது குறித்து அந்த படத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் பேட்டி ஒன்று கூறியிருந்தார். அதில் அவர், தமிழ் சினிமாவின் அட்ராசிட்டி லைஃபை கவுண்டமணி சார் மாதிரி யாரும் என்ஜாய் பண்ணிருக்க முடியாது. ஜென்டில்மேன் படத்தில் ஒட்டகத்தை கட்டிக்கோ என்ற பாடல் வரும். அந்த பாடலில் அவருக்கு கொடுத்த கால்ஷீட் தேதியில் பாடல் ஷூட் என சொன்னவுடன் அதெல்லாம் முடியாது நானும் பாட்டில் ஆடுவேன் என்று கவுண்டமணி சார் சொல்லிவிட்டார்.

ஷூட்டிங்கில் கவுண்டமணி செய்தது:

ஆனால், இயக்குனர், இது ஹீரோயினி கனவு பாடல். இதில் நீங்கள் வந்தால் லாஜிக்கா இருக்காது சார் என்று சொன்னார். உடனே கவுண்டமணி, ஹீரோயினி கனவில் 20 டான்சர் வரலாம். ஹீரோ பிரென்ட் நான் வரக்கூடாதா? என்று கேட்டு அந்த பாடலில் நடித்திருந்தார். இப்படி ஜென்டில்மேன் பட சூட்டிங் கலகலப்பாகவே இருந்தது என்று கூறி இருக்கிறார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் ஜென்டில்மேன். இந்த படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருந்தது.

Advertisement