‘உங்க கிட்ட இருந்து இத எதிர்பார்க்கல Homelyயா இருங்க’ – 96 குட்டி ஜானு பதிவிட்ட புகைப்படத்தால் புலம்பிய ரசிகர்கள்.

0
215
gowri
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்பவர் கௌரி கிஷன். பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷன் மகள் தான் கௌரி கிஷன். இவர் மலையாளத்தில் வெளிவந்த மார்க்கம்களி என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். பின் தமிழில் வெளிவந்த 96 படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும் நடித்திருந்தனர். நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் கௌரி கிஷன் நடித்திருந்தார்.மேலும், இந்த படத்தில் ராம்- ஜானு ஜோடி தான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது. அதில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது.

- Advertisement -

96 குட்டி ஜானு :

குறிப்பாக திரிஷாவின் பள்ளி கதாபாத்திரத்தில் வந்த கௌரி கிருஷ்ணன் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தார். அதிலும் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனை தொடர்ந்து தெலுங்கில் 96 படத்தின் ரீமேக்கில் அதே வேடத்தில் கௌரி கிஷன் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து கௌரி கிஷன் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார்.

மாஸ்டர் படத்தில் கௌரி கிஷன் :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து இருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் கௌரி கிஷன் கல்லூரி மாணவியாக நடித்திருப்பார். இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகமாக கவனிக்கப்பட்டது. பின் இவர் தனுஷின் கர்ணன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

புலம்பி தள்ளும் ரசிகர்கள் :

தான் அடிக்கடி நடத்தும் போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சம் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் ‘என்ன சிம்ரன் இதெல்லாம்’ , ‘உங்க கிட்ட இருந்து இத எதிர்பார்க்கல’ என்றெல்லாம் கமண்ட் போட்டு வருகின்றனர்.

Advertisement