கௌரி கிஷன் மற்றும் அனகா நடித்திருக்கும் லெஸ்பியன் கதாபாத்திரத்தின் மகிழினி ஆல்பம் குறித்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது இதனை ரசிகர்கள் அனைவரும் வைரலாகி வருகிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக கௌரி கிஷன் திகழ்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் மகிழினி ஆல்பம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கௌரி கிஷன் உடன் அனகா நடித்து இருக்கிறார். இவரும் தமிழில் சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழினி படத்தில் கௌரி கிருஷ்ணன் மற்றும் அனகா இருவரும் இதுவரை யாரும் முயற்சிக்காத ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார். மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஓரினச் சேர்க்கையாளருக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதையும் பாருங்க : சமுத்திரகனி படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் தென்னிந்திய சினிமாவின் டாப் தமிழ் நடிகையின் தங்கை.
இந்நிலையில் மகிழினி படத்தின் இசை ஆல்பத்தை சரிகமா ஒரிஜினல் வெளியிட்டிருக்கிறார்கள்.
இது குறித்து இயக்குனரான பாலசுப்பிரமணியன் கூறியிருப்பது, LGBT என்று அழைக்கப்படும் ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றி நம்முடைய சமுதாயத்தில் புரியாத பல விஷயங்களை இந்த படத்தில் கூறியிருக்கிறோம். சென்னையை சேர்ந்த மலர் கதாபாத்திரத்தில் கௌரியும், டில்லியில் இருந்து வரும் இந்துஜா கதாபாத்திரத்தில் அனகாவும் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் 2 பேரும் பரதநாட்டியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். இதனால் இவர்கள் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். அப்போது இவர்கள் பரதநாட்டியத்திற்காக ஒத்திகை செய்து கொண்டிருக்கும் போது அவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது. பின் இதனால் என்ன நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
அதோடு இந்த படம் குறித்து அவர்களிடம் பேசியபோது அவர்கள் இருவரும் கதையை புரிந்து கொண்டு சரி என்று சொன்னார்கள். படத்திலும் அதற்கேற்றவாறு அவர்களுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையில் மதன் கார்க்கியின் பாடல் வரிகள் எல்லாம் அற்புதமாக அமைந்திருக்கிறது. மேலும், நான் நினைத்ததை விட மிக உயரத்திற்கு மகிழினி ஆல்பம் சென்றது சந்தோஷமாக இருக்கிறது. படத்திற்கு நடன அமைப்பும், ஒளிப்பதிவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தை தயாரிக்க முன்வந்த ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் நான் மனப்பூர்வமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமில்லாமல் மகிழினி ஆல்பத்தை சரிகமா ஒரிஜினல்ஸ் நிறுவனம் வெளியிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.