சமுத்திரகனி படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் தென்னிந்திய சினிமாவின் டாப் தமிழ் நடிகையின் தங்கை.

0
978
pooja
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சமுத்திரக்கனி திகழ்ந்து வருகிறார். தற்போது சமுத்திரகனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்திரை செவ்வானம். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கான போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கியிருக்கிறார். சண்டை இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் சில்வா இப்படத்தின் மூலம் இயக்குனராக சினிமா உலகில் களம் இறங்கி இருக்கிறார். இந்த படம் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர்களுடன் பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகை சாய் பல்லவியின் தங்கை தான் பூஜா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பாளராகவும், மனோஜ் பரமஹம்சா மற்றும் கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவாளர்களாக பணிப்புரிந்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை ஏ.எல்.அழகப்பன் மற்றும் பி.மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர்.

இதையும் பாருங்க : ‘தான் வன்னியர் அல்ல என்று சொன்ன கோவிந்தன்’ – சேரன் பதிவிட்ட பதிவு. சர்ச்சையில் சிக்க வைக்கப் பார்த்த நெட்டிசன்.

- Advertisement -

இந்நிலையில் இப்படம் குறித்து சமுத்திரக்கனி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பது, சித்திரை செவ்வானம் என்பது ஒரு அழகான, அற்புதமான படம். என்னுடைய தம்பி பைட் மாஸ்டர் சில்வா திடீரென ஒரு நாள் வந்து என்னிடம் இப்படத்தின் கதையை சொன்னார். அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு அப்பா, பொண்ணு இருவருக்கும் இடையிலான உணர்வுபூர்வமான பந்தம், அவர்களின் வாழ்க்கைப் பயணம், அதில் நடக்கும் பிரச்சினைகள் இதையெல்லாம் மையமாகக் கொண்ட கதை தான் சித்திரை செவ்வானம். அதோடு மனதை உருக்கும் வகையில் ஒரு உணர்வுபூர்வமான கதை என்றே சொல்லலாம்.

image

மேலும், கதையை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே நான் ஷூட்டிங் போகலாம் என்று சொன்னேன். நாங்கள் நினைத்ததை விட படம் அற்புதமாக உருவாகி இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு மிகச்சிறந்த படத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு சில்வாக்கு மிக்க நன்றி. நம்முடைய சமூகத்திற்கு அவசியமான திரைப்படம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் திரைப் படமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அதேபோல் சமுத்திரகனியை தொடர்ந்து நடிகை ரீமா கல்லிங்கல் கூறியிருப்பது, ஆரம்பத்தில் மாஸ்டர் சில்வாவும், இயக்குனர் விஜய்யும் இந்த படத்திற்கு என்னை அணுகும் போது போலீஸ் கதாபாத்திரம் என்று சொன்னார்கள். நானும் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் என்று தான் நினைத்தேன். ஆனால், இது ஒரு அப்பா மகளுக்கான ஆழமான, அழகான உணர்வை சொல்லும் கதையாக இருந்ததை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தமிழ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவதற்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த படம் இயக்குனர் சில்வா அவர்களுக்கு வெற்றி படமாக அமையும் என்று நம்புகிறேன். என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement