ஜி.பி முத்து விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஜி பி முத்து. இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. ஆரம்பத்தில் ஜிபி முத்து நன்றாக தான் விளையாடி இருந்தார்.பின் இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்குமே ஷாக்கை கொடுத்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜி.பி முத்துவுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் இவர் ஏகப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து வருகிறார். இதை அடுத்து இவர் சினிமாவிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தில் ஜி.பி முத்து வசித்து வருகிறார். அங்குள்ள சில பேருடைய ஆக்கிரமிப்பால் கீழ்தெரு என்ற பகுதி காணாமல் போனதாகவும், கோயிலுக்கு சொந்தமான இடத்தை கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக ஜி.பி முத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். அதில் அவர், பெருமாள்புரத்தில் கீழ் தெரு என்று ஒரு தெரு இருந்தது. ஒரு இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதியாக பொதுமக்கள் பயன்படுத்தி இருந்தார்கள்.
ஜி.பி முத்து குறித்த தகவல்:
இது வருவாய் துறை ஆவணங்களிலும் இருக்கிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி கிராமமே காணாமல் போனது. அதேபோல் பெருமாள்புரத்தில் கீழ் தெரு என்ற ஒரு தெருவே காணாமல் போய்விட்டது. அதை முழுக்க பல்வேறு தனிநபர்களால் ஆபர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதை அடைக்கப்பட்டு இருக்கிறது. அது தொடர்பான டாக்குமெண்ட் எல்லாமே என்னிடம் இருக்கிறது. இதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து இவர் அளித்த பேட்டியில், கோயில் சொத்தை விற்க யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால், எங்கள் கோயில் சொத்தை வீற்றிருக்கிறார்கள். அதோடு என் வீட்டுக்கு வரும் என்னுடைய சொந்த பாதையையுமே அடைத்திருக்கிறார்கள்.

ஜி.பி முத்து புகார்:
ஒரு தனிப்பட்ட நபர் தனது சொந்த பகை காரணமாகவே அவருடைய குடும்பத்தோடு சேர்ந்து அராஜகம் செய்கிறார். அந்த தனிப்பட்ட நபரால் என்னுடைய குடும்பத்திற்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது.
என்னுடைய குடும்பத்தினரை தகாத வார்த்தைகளும் திட்டுகிறார். எல்லோருமே நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள். ஆனால், யாருமே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கீழ்தெருவை அதிகாரிகள் தான் கண்டுபிடித்து தரணும். அதுக்காக தான் மனு கொடுக்க வந்திருக்கிறேன். நான் ஆறு வருஷமாக இதுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். சில நாட்களில் தண்ணீர் அடித்து விட்டு எல்லாம் பிரச்சனை செய்தார்கள். நான் அதை எல்லாம் நான் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன். 20 அடி பொதுபாதையை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=T4I7Rjfro6M
ஜி.பி முத்து - ஊர் மக்கள் சண்டை:
என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் தான் இப்படி செய்கிறார்கள். என் சோலியை முடிக்கணும் என்பதே குறிக்கோளாக இருக்கிறார்கள். இனியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்தோடு தீக்குளிப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஜி.பி முத்து அளித்த புகாரின் பேரில் எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஜி.பி முத்துவின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அந்த பகுதியிலேயே பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் ஜி.பி முத்து வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பின் ஊர் மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறார்கள். அந்த இடத்திற்கு ஜி.பி முத்து வந்தார். உடனே அங்கிருந்த மக்கள் ஜி.பி முத்து ஒழிக என்று கோஷமெல்லாம் போட்டு இருக்கிறார்கள். இதை அடுத்து போலீசார் ஜி.பி முத்துவை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=CDKe6SjyAK0
முடிவுக்கு வந்த பிரச்சனை:
அதற்குப் பிறகு ஊர் போலீஸிடம் ஊர் மக்கள், ஜி பி முத்து விளம்பரத்திற்காக தான் இந்த செயல்களை செய்து கொண்டிருக்கிறார். கோவிலை அதற்குரிய இடத்தில்தான் புதுப்பித்து கட்டுவதாக கூறியிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. அப்போது ஜி.பி முத்து,. கோயில் பணிகளை நான் தடுக்கவில்லை என்னுடைய வீட்டிற்கு வரும் பாதையை மறைத்து கோயில் கட்ட வேண்டாம் என்று தான் சொல்லி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். பின் இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில், கோயில் இருந்த இடத்தில் தான் புதுப்பிக்க வேண்டும். வேறு இடத்தில் கோவிலை மாற்றக்கூடாது என்று அதிகாரிகள் சார்பாக கோரிக்கை வைத்ததை மக்களும் ஏற்று கொண்டார்கள். அதற்குப்பின் ஜி பி முத்து மற்றும் ஊர் மக்கள் இடையிலான பிரச்சனை சுமுகமாக முடிக்கப்பட்டது.






