பம்பர் படத்தில் தன்னை பண்ணி என்று விமர்சித்த ப்ளூ சட்டை – தனது ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்த ஜி.பி.முத்து

0
2433
- Advertisement -

ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கி ஜிபி முத்து வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஜிபி முத்து. டிக் டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் ஜி பி முத்து. இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் யூட்யூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.

-விளம்பரம்-

அதிலும் யூட்யூப் சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருக்கிறது என்று சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் இவரது யூட்யூப் சேனல் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும், யூட்யூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜி பி முத்து சன்னி லியோனுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்திருந்தார். அதோடு, இவர் சன்னி லியோனுடன் இணைந்து ‘Oh My Ghosh’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி தர்ஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. அதோடு ஜிபி முத்துக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இவர் சினிமா மட்டும் இல்லாமல் ஏகப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஜிபி முத்து:

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக ஜிபி முத்து பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் பண்ணும் காமெடிக்கு அளவே இல்லை. வாரம் வாரம் இவரை பார்ப்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் கூட்டமும் இருக்கிறது. அதேபோல் தற்போது ஜிபி முத்து அவர்கள் தமிழ் சினிமாவில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பம்பர். இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:

வெற்றிக்கு ஜோடியாக இந்த படத்தில் சிவானி நடித்து இருக்கிறார். இந்த படத்தை சிவக்குமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் நல்ல விதமாக தான் கூறியிருந்தார். ஆனால், கடைசியில் அவர், பன்றி ஒன்றை உள்ளே விட்டு படத்தைக் கெடுத்து விட்டார்கள். அந்தப் பன்னி யார்? என்று கண்டுபிடித்து அங்கேயே அடித்துக் கொன்று இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியிருந்தார்.

ஜி பி முத்து பதிவிட்ட வீடியோ:

இப்படி இவர் கூறியது வேறு யாரும் இல்லை நம்ம ஜிபி முத்துவை தான். இது தொடர்பாக ஜி பி முத்து அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர், பம்பர் படத்திற்கு நல்லாத்தான் ப்ளூ சட்டை மாறனை விமர்சனம் செய்திருந்தார். ஆனால், இடையே ஒரு பன்னி வருதுன்னு சொல்றாரு. அவர் என்ன தான் பண்ணின்னு சொல்றாரு. ஏன் நான் பண்ணியா? பன்னி கடிச்சா என்ன ஆகும் தெரியுமா? தேவையில்லாமல் என்னை சீண்டினால் உன்னை நான் சும்மா விடமாட்டேன் என்று ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விளாசி பேசி இருக்கிறார். இதை பார்த்து ஜி பி முத்து ரசிகர்கள் அவருக்கு சமாதானம் சொல்லியும், ப்ளூ சட்டை மாறனை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியும் வருகிறார்கள்.

Advertisement