சரண், வெங்கட் பிரபுவ தெரியுது, நடுவில் இருக்கும் இந்த ஷங்கர் பட நடிகர் யாருன்னு தெரியுதா ?

0
7426
thaman

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களாக வெங்கட் பிரபுவும், சரனும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இவர்கள் இருவரும் திரைப்பட இயக்குனர்கள் மட்டுமில்லாமல் நடிகர்களும் ஆவர். இவர்கள் இருவரும் நிறைய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் இவர்கள் இருவருக்கும் நடுவில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? அவர் வேற யாரும் இல்லைங்க இசையமைப்பாளர் தமன் தான். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளராக தமன் திகழ்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் இசையமைத்து வருகிறார்.

இதையும் பாருங்க : உன்ன திட்றதுக்குனே யூடுயூப் சேனல் ஆரம்பிச்சி இருக்கேன்டி – வனிதாவை வெளுத்து வாங்கிய பெண்.

- Advertisement -

இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சிந்தனை செய், அய்யனார், வந்தான் வென்றான் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இசை இயக்குனர், பின்னணி பாடகர், இசைக்கருவி இசைப்பவர், திரைப்பட நடிகர் எனப் பன்முகங்கள் கொண்டவர்.

தற்போது இவரின் சிறு வயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து பலரும் உண்மையாலுமே இவர் இசை அமைப்பாளர் தமன்னா!! என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement