குணா படத்தை இயக்கியது சந்தானபாரதி இல்ல – படத்தின் ஒளிப்பதிவாளர் சொன்ன ஷாக்கிங் உண்மை. வைரலாகும் வீடியோ.

0
507
- Advertisement -

குணா படத்தை இயக்கியது சந்தானபாரதி இல்லை என்று அந்த படத்தில் ஒளிப்பதிவாளர் கூறி இருக்கும் உண்மை பலரை அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த படம் கடந்த 22 ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். அதோடு இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சொல்லப்போனால், மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்று வருகிறது.

- Advertisement -

மஞ்சுமெல் பாய்ஸ் படம்:

இந்த படம் திரையிடப்பட்ட திரையரங்கில் எல்லாம் ஹவுஸ்புல் காட்ச்சிகளாகவே இருக்கின்றது. அந்த அளவிற்கு மஞ்சுமெல் பாய்ஸ் படம் சக்கை போட்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கொடைக்கானலில் உள்ள பகுதிகளில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த படம் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. நடிகர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்து பிரபலமான படங்களில் ஒன்று குணா.

குணா படம்:

இந்த படத்தின் பாடல்களும் காட்சிகளும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அதுவும் கமலஹாசனின் குணா படத்தில் ஒரு குகை வரும். அதனால் தான் இந்த இடத்திற்கு குணா குகை என்று பெயர் வந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இடம்பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த குணா குகையை கண்டுபிடிக்க கமலஹாசன் கொஞ்சம் நஞ்சம் கஷ்டப்பட்டது கிடையாது.

-விளம்பரம்-

படத்தின் ஒளிப்பதிவாளர் வேணு :

அதே போல மஞ்சுமெல் பாய்ஸ் படம் வந்ததில் இருந்தே இந்த படத்தை இயக்கிய சந்தான பாரதியையும் பல மீடியாக்கள் பேட்டி எடுத்து வருகின்றனர். அவரும் இந்த படத்தை எடுக்க பட்ட கஷ்டங்கள் குறித்து கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை இயக்கியது சந்தானபாரதி இல்லை என்று இந்த படத்தில் வேணு அளித்திருக்கும் பேட்டி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

படத்தை இயக்கியது யார் :

இதுகுறித்து பேசிய இருக்கும் அவர் ‘ சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவரிடம் தொகுப்பாளினி குணா படம் எடுக்கும்போது அதனுடைய ஆபத்துகள் எங்களுக்கு தெரியாது என்று சந்தான பாரதி கூறியிருக்கிறார் என்று சொன்னதும் ‘அது அவருக்கு தெரியாது. ஏனென்றால் குணா படத்தை இயக்கியது அவர் கிடையாது கமல் தான் அதை செய்தார். பெரும்பாலான நாட்களில் சந்தான பாரதி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட வர மாட்டார். குறைந்தபட்ச நபர்களை வைத்து நாங்கள் படப்பிடிப்பை செய்தோம். குணா குகைக்கு வராமலேயே அதனுடைய ஆபத்து பற்றி அவருக்கு எப்படி புரியும் என்று கூறியிருக்கிறார்

Advertisement