எனக்கும் சூதாக்கு சண்டை , அதான் இறுதி சுற்று பண்ணல – Gv பிரகாஷ் ஓபன் டால்க்.

0
362
gvprakash
- Advertisement -

கோலிவுட்டில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

பின் இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கி இருந்தார். அதுவும் , இவருடைய பென்சில், டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர் படமும், ஜெயில் படமும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

- Advertisement -

ஜி.வி. பிரகாஷ் நடித்த படம்:

சமீபத்தில் ஜிவி பிரகாஷின் நடிப்பில் வெளிவந்த இருந்த படம் செல்பி. இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படம்:

தற்போது விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படம் 13. இந்த படம் ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் அவர்கள் “ட்ராப் சிட்டி”(trap city) என்ற படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். தற்போது ஜிவி பிரகாஷ் அவர்கள் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டி:

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், நானும் இயக்குனர் சுதாவும் நல்ல நண்பர்கள். எனக்கும் சுதாவுக்கும் நிறைய சண்டைகள் வரும். ஒரு அக்கா தம்பி உறவுக்குள் எப்படி சண்டை வருமோ, அந்த அந்த மாதிரி நாங்கள் சண்டை போடுவோம். அப்போது இறுதி சுற்று படத்தில் இசையமைக்க வாய்ப்பு வந்தது. ஆனால், நான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். ஏன்னா, ஏற்கனவே இருவருக்கும் சண்டை. இதனால் நம்முடைய ரிலேஷன்ஷிப் கெட்டுப் போய்விடக் கூடாது என்று சொல்லிவிட்டேன். அதற்கு பின்பு சூரரைப்போற்று படத்தில் பட வாய்ப்பு வந்தது. எனக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்தது.

சூரரைப்போற்று பட வாய்ப்பு:

அதனால் நான் பண்ணுகிறேன் என்று சொன்னேன். ஒரு நாள் சுதா, எனக்கு போன் பண்ணி நீ நிறைய படங்களில் நடிக்கிறீயாமே? என்று கேட்டார். ஆமாம், நான் படங்களில் நடிக்கிறேன். ஆனால், நான் சொன்ன வார்த்தையை தான் கவனிக்க வேண்டும். நான் செய்து முடிக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக செய்து தருவேன். என் மீது நம்பிக்கை இல்லை என்றால் விட்டுவிடலாம், இதனால் நம்முடைய உறவு பாதிக்கக்கூடாது என்று சொன்னேன். உடனே அவர் நீதான் பண்ற என்று சொல்லி வைத்து விட்டார். இந்த படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement