விவாகரத்துக்கு பிறகும் சைந்தவியுடன் பணியாற்றுவது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜிவி பிரகாஷ் பகிர்ந்து இருக்கும் விஷயம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜிவி பிரகாஷ்-சைந்தவி பிரிய இருப்பதாக அறிவித்த செய்தி தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் மிக பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன்முதலாக ‘வெயில்’ என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்தப் படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக இந்த 2024 ஆம் ஆண்டு இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டு இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட் தான்.
ஜிவி பிரகாஷ்- சைந்தவி திருமணம்:
இதற்கிடையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்கள். திருமணம் ஆண்டு 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. சைந்தவியும் பிரபலமான பாடகி ஆவார். இப்படி ஒரு நிலையில் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தாங்கள் இருவரும் பிரிவதாக இருவரும் அறிவித்து இருந்தார்கள். இது பலருக்கும் இருவரும் அதிர்ச்சி தான். இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்று தற்போது வரை தெரியவில்லை.
ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவு:
ஆனால், இது குறித்து பல வதந்திகள் இணையத்தில் வைரலாகி வந்தது. இணையவாசிகள் இது குறித்து கேள்வியும் எழுப்பி இருந்தார்கள். மேலும், பிரிவுக்கு பின் இவர்கள் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், விவாகரத்திற்கு பிறகு, சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் கூட சைந்தவி பாடியிருந்தார். அதேபோல், சமீபத்தில் வெளியான அமரன், வணங்கான் போன்ற ஜிவி பிரகாஷ் இசையமைத்த படங்களிலும் சைந்தவி பாடல்களை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதட்டிய சைந்தவி:
அதேபோல், சமீபத்தில் 22 ஆவது சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழாவில், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை ‘அமரன்’ படத்திற்காக ஜிவி பிரகாஷ் வென்றிருந்தார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த அவரது முன்னாள் மனைவி சைந்தவி வெகு உற்சாகமாக தொடர்ந்து கைகளை தட்டிக் கொண்டிருந்தார். சைந்தவி அப்படி செய்தது பலரது கவனத்தை பெற்றது. அதோடு ஜிவி விருதை பெரும் போது சைந்தவி கைத்தட்டி இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரல் ஆனது.
ஜிவி பிரகாஷ் பேட்டி:
இப்படி விவாகரத்துக்கு பிறகும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஒன்றாக பணியாற்றுவது அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. இந்நிலையில், இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜிவி பிரகாஷ் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில், நாங்கள் ரொம்பவே ப்ரொபஷனலாக இருக்கிறோம். அது மட்டுமின்றி ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதையையும் வைத்திருக்கிறோம். அந்த மரியாதை காரணமாகத்தான் பிரிவுக்குப் பிறகும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுகிறோம் என்று கூறியிருக்கிறார்.