பூம் பூம் மாட்டுக்காரரை பாராட்டி தேடும் ஜி வி பிரகாஷ் – காரணம் அவரின் இந்த வீடியோ தான்.

0
558
gv
- Advertisement -

சமூக வலைதளத்தில் அவ்வப்போது யாராவது ஒருவர் பிரபலமாகி விடுகின்றனர். அதே போல ஒரே வீடியோ மூலம் பலரது கவனத்தை ஈர்த்துவிடுகின்றனர். சமூக வலைதளத்தில் பிரபலமானதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தெருவில் பூம் பூம் மாட்டுக்காரரின் வீடியோவை பார்த்து அவரை சினிமாவில் பயன்படுத்திக்கொள்வதாக கூறியுள்ளார் ஜி வி பிரகாஷ். தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் ஜீ.வி. பிரகாஷ்.

-விளம்பரம்-

தற்போது உள்ள பிரபலமான நடிகர்களின் முன்னணி நடிகராக ஜி.வி. பிரகாஷ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ஹீரோவாகவும் களமிறங்கினார்.

இதையும் பாருங்க : திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து குழ்ந்தை பெற்ற ஸ்ரேயா கோஷல் – சந்தோசமாக பகிர்ந்த பதிவு.

- Advertisement -

என்னதான் இவர் ஹீரோவாக நடித்து வந்தாலும் இவரை இசையமைப்பாளராக தான் பலருக்கும் பிடித்து இருக்கிறது. அதிலும் அசுரன் படத்திற்கு பின்னர் இவரது இசைக்கு பலரும் ரசிகரானார்கள். சினிமா மட்டுமல்லாது பொதுப்பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதிலும், திறமைகளை கண்டறிந்து வாய்ப்பு வழங்குவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட இணையவாசி ஒருவர், இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.இதைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், ”இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement