திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து குழ்ந்தை பெற்ற ஸ்ரேயா கோஷல் – சந்தோசமாக பகிர்ந்த பதிவு.

0
4098
shreya
- Advertisement -

தென்னிந்திய மற்றும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான பாடகியாக திகழ்ந்து வரும் ஸ்ரேயா கோஷல் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்ரேயா கோஷால், 6 வயதில் இருந்தே இசையை பயிலத் துவங்கினார். ஒரு தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பாடல் பாட பங்கேற்றார் அந்த 16 வயது சிறுமி. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த இயக்குநர் சஞ்சய் லீலா பான்சாலி, இவரின் குரலை கேட்டு வியந்து போனார். பின்னர் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தேவதாஸ் படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்தார் அதிலும் ஸ்ரேயா கோஷல் அறிமுகமான முதல் படத்திலேயே ஐந்து பாடல்களையும் பாடியிருந்தார்.

-விளம்பரம்-

திரைத்துறையில் 18 ஆண்டுகளுக்கு மேலாக பாடி வரும் இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார் இதுவரை சிறந்த பாடகருக்கான விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழில் இவர் இளையராஜா, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா கோஷல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

இதையும் பாருங்க : எனது கார் டிரைவர், வீட்டு வேலை செய்பவர்கள பத்தி எண்ணி மானமே போச்சி – தனது நிர்வாண வீடியோவால் கபாலி பட நடிகை வேதனை.

- Advertisement -

தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடி இருந்தாலும் குறிப்பாக ஏ ஆர் ரகுமான் இசையில் இவர் பாடிய பாடல்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத பாடல்களாக இருந்து வருகிறது. ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.

திருமணமாகி 6 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த இவர் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்ரேயா கோஷலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement