பெயரை மாற்றிய ஜி.வி.பிரகாஷ்..! இனி தமிழில் மட்டும் தான்..! ஜி.வி.பிரகாஷ் எடுத்த புதிய சபதம்.!

0
1034
Gv-prakash-Actor
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக நடித்து கலக்கி நடிகர் ஜி வி பிரகாஷ். இவரது படங்கள் என்றாலே இளசுகள் மத்தியில் ஒரு தனி வரவேற்பை பெற்று விடுகிறது. நடிப்பையும் தாண்டி இவர் பல சமூக அக்கறையான விடயங்களையும் செய்து வருகிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

தமிழ் உணர்வு அதிகம் கொண்டுள்ளவராக இருக்கும் ஜி வி பிரகாஷ் ஜல்லிகட்டு விவகாரத்திலும் சரி, விவசாயிகள் பிரச்சனைகளிலும் சரி தன்னால் முடிந்த ஆதரவை தெரிவித்திருக்கிறார். தற்போது இவரது தமிழ் பற்றை மீண்டும் நிரூபிக்கும் வகையில் மற்றுமொரு சிறப்பான செயலை செய்துள்ளார்.

பொதுவாக பிரபலங்களும் சரி, அதிகாரிகளும் சரி தங்களது கையெழுத்தை ஆங்கிலத்தில் தான் போடுவார்கள். இதில் ஒரு சிலர் மட்டுமே தமிழில் கையெழுத்து போடும் பலமுடையவராக இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஜி பிரகாஷும் இனிமேல் தமிழில் தான் கைலயெழுத்திடபோவதாக அறிந்துள்ளார்.

-விளம்பரம்-

gv prakash

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜி வி பிரகாஷ் “உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ்.இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement