‘சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்’ – ஜி.வி.பதிவிட்ட உருக்கமான பதிவு.

0
214
- Advertisement -

தனது விவாகரத்து அறிவிப்புக்கு பின் குவிந்த விமர்சனங்கள் குறித்து ஜி.வி. பிரகாஷ் பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழ் சினிமாவில் எத்தனையோ பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் ஆனால் சமூக காலமாக பிரபலங்களின் அடுத்தடுத்து விவாகரத்து தமிழ் சினிமா டாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கிக் கொண்டு வருகிறது. அதிலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பல பிரபலங்கள் தங்கள் விவாகரத்தை சர்வ சாதாரணமாக அறிவித்து விடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிறந்த தமிழ் சினிமா பிரபலங்களான ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதியின் விவாகரத்து தான் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் பேசிக் கொள்ளாகி வருகிறது.

-விளம்பரம்-

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதி இருவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2020 ஆம் ஆண்டு இரவுகளுக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது திருமணத்திற்கு முன்னதாகவே இவர்கள் இருவரும் 11 ஆண்டுகள் காதலித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்து இருந்தனர்.

- Advertisement -

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் ”பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு நானும் சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். எங்களுடைய மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும், அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும்மிகவும் தனிப்பட்ட இந்த் மாற்றத்தின் போது எங்களுடைய பிரைவசியை மதித்து புரிந்துகொள்ளுமாறு ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமாக காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்’புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

-விளம்பரம்-

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது “யாரோ ஒரு தனிநபரின்” வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள் .

அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனிமனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement