Exam fees கட்ட உதவி கேட்ட மாணவி, பணம் அனுப்பிய Gv பிரகாஷ் – Fake Id என்று புலம்பும் ரசிகர்கள் சொன்ன காரணம்.

0
381
Gv Prakash
- Advertisement -

கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்த உதவி கேட்ட மாணவிக்கு ஜிவி பிரகாஷ் செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து தமிழுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைத்து இருக்கிறார். பின் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். அதுவும் , இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

- Advertisement -

ஜி.வி. பிரகாஷ் நடித்த படம்:

கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர் படமும், ஜெயில் படமும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதன் பின் ஜிவி பிரகாஷின் நடிப்பில் வெளிவந்த இருந்த படம் செல்பி. இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படம் 13.

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படம்:

இந்த படம் ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் அவர்கள் “ட்ராப் சிட்டி”(trap city) என்ற படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். அதன் பின் ஜிவி பிரகாஷ் அவர்கள் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்த சூரரை போற்று படத்திற்கு இசையமைத்ததற்காக ஜிவி பிரகாசுக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.

-விளம்பரம்-

மாணவிக்கு உதவி செய்த ஜி வி பிரகாஷ் :

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் சமூகம் சார்ந்த விஷயங்களில் தனக்கு தோன்றிய கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது இவருடைய வழக்கம். அது மட்டும் இல்லாமல் பலருக்கு உதவிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி மாணவி பதிவிட்டு இருந்த பதிவுக்கு ஜிவி பிரகாஷ் செய்திருக்கும் செயல் சோசியல் மீடியாவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. அதாவது, ஜிவி பிரகாஷின் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து அதில் கல்லூரி மாணவி ஒருவர் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

Fake Id என்று சொல்லும் ரசிகர்கள் :

அதில், நான் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ படிக்கிறேன். இந்த மாதம் என்னுடைய கல்வி தேர்வுகள் தொடங்கியிருக்கிறது. இதில் என்னுடைய தேர்வு கட்டண விவரத்தை இணைத்து இருக்கிறேன். உங்களது உதவி எனக்கு தேவை என்று கேட்டிருந்தார். இப்படி மாணவி பதிவிட்ட பதிவுக்கு ஜிவி பிரகாஷ், உங்களுடைய google pay கணக்கிற்க்கு பணம் அனுப்பப்பட்டு விட்டது என்று பதில் அளித்து இருந்தார். கல்லூரி மாணவி கேட்ட உதவிக்கு உடனே ஜிவி பிரகாஷ் செய்திருக்கும் செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. ஆனால், அது Fake ஐடி என்றும் யாரும் நாளை தேர்வு வைத்துகொண்டு இன்று கட்டணம் கட்ட மாட்டார்கள், அணைத்து கல்லூரியும் விடுமுறையில் இருக்கும் போது எந்த கல்லூரியில் விடுமுறையில் தேர்வு வைக்க மாட்டார்கள் என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement