படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.! பொது மேடையில் கூறிய ஜி வி பிரகாஷ் நடிகை.!

0
4400
G-v-Prakash

சினிமாத்துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி நடத்திய நிர்வாண போராட்டத்திற்கு பிறகு காஸ்டிங் கவுச் என்ற விஷயம் சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது.ஸ்ரீரெட்டி சர்ச்சையை தொடர்ந்து பல்வேறு நடிகைகளும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகியான சின்மயி கவிஞர் வைரமுத்து மீது காஸ்டிங் கவுச் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார் அதேபோல பல்வேறு நடிகைகளும் தங்கள் வாழ்வில் நடந்த பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகின்றனர் அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் 4ஜி என்ற படத்தில் ஜிவி பிரகாஷின் ஜோடியாக நடித்து வரும் காயத்ரி சுரேஷ், தனது சினிமா வாழ்க்கையில் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.

இதையும் பாருங்க : 7 கோடி ரூபாய்க்கு சொகுசு வேன் வாங்கிய அல்லு அர்ஜுன்.! அப்படி என்ன ஸ்பெஷல் பாருங்க.! 

- Advertisement -

மிஸ் கேரளா அழகியான காயத்ரி சுரேஷ் மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஜமுனாபாரி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்துள்ள சில்ரன்ஸ் பார்க் என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி சுரேஷ் பேசுகையில் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் பிரபல தயாரிப்பாளர்கள் சிலர் தன்னை படுக்கைக்கு அறிவித்ததாக கூறியுள்ளார்.

மேலும் தனக்கு படுக்கையை பகிர்ந்தால் சினிமா வாய்ப்பு தருவதாக சில தயாரிப்பாளர்கள் மெசேஜ் அனுப்பியதாகவும் .ஆனால், அவர்களுக்கு தான் எந்த ஒரு பதிலையும் சொல்லவில்லை என்றும் நடிகை காயத்ரி சுரேஷ் தெரிவித்துள்ளா.ர் பொதுமேடையில் காஸ்டிங் கவுச் விஷயத்தைப் பற்றி பேசிய காயத்ரி சுரேஷின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தன்னை படுக்கைக்கு அழைத்த அந்த தயாரிப்பாளர்களின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை.

-விளம்பரம்-

Advertisement