இசை நாயகன் ஜி.வி பிரகாஷுக்கு இத்தனை கோடி சொத்து இருக்கா? வெளியான networth தகவல்

0
231
- Advertisement -

நடிகர் ஜி.வி பிரகாஷின் சொத்து மதிப்புகள் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ஜி வி பிரகாஷ். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இசையமைப்பாளர், பாடகர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்நிலையில் இன்று ஜி.வி பிரகாஷ் உடைய 38 வது பிறந்தநாள். இவருடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் இவருடைய சொத்து விவரம் குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது. இவர் நடிகர், இசையமைப்பாளராக 80 கோடிக்கு மேல் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவரிடம் ஏராளமான சொகுசு கார்கள் இருக்கிறது.

- Advertisement -

ஜி. வி பிரகாஷ் திரைப்பயணம்:

ஜி. வி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக ‘வெயில்’ என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைத்து இருக்கிறார். பின் இவர் ‘ஜென்டில்மேன்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார்.

ஜி.வி பிரகாஷ் நடித்த படங்கள்:

அதுவும் , இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால், சமீப காலமாக ஜி. வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர், ஜெயில், செல்பி, அடியே, டியர், கள்வன் போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படங்கள்:

விவேக் இயக்கத்தில் ஜி. வி பிரகாஷ் நடித்திருக்கும் படம் 13. இந்த படம் ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜி. வி பிரகாஷ் அவர்கள் “ட்ராப் சிட்டி”(trap city) என்ற படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். அதன் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடிமுழக்கம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் இவர் பிரபல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.

ஜி. வி பிரகாஷ் குடும்பம்:

இதனிடையே ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவருமே சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. அதற்கு பிறகு தான் கடந்த 2013ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு ‘அன்வி’ என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி. வி பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய போவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்கள். இது பலருக்கும் அதிர்ச்சி தான்.

Advertisement