27 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை டிவிட்டரில் ஜிவி பிரகாஷ் போட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் பணிபுரிந்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கி இருந்தார். அதுவும் , இவருடைய பென்சில், டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இதையும் பாருங்க : இவ்ளோ ரூபா கொடுப்பாங்கனு தான் சினிமாவிற்கு வந்தேன் – சினிமாவுக்கு வருவதர்க்கு முன் என் சம்பளம் இவ்வளவு தான். மிஸ்கின் சொன்ன தகவல்.
ஜி.வி. பிரகாஷ் நடித்த படம்:
கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர் படமும், ஜெயில் படமும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. சமீபத்தில் ஜிவி பிரகாஷின் நடிப்பில் வெளிவந்த இருந்த படம் செல்பி. இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ஆக்சன், திரில்லர் பாணியில் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படம்:
மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படம் 13. இந்த படம் ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று இருந்தது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் அவர்கள் ஹாலிவுட்டில் நடிக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ஹாலிவுட் படம்:
“ட்ராப் சிட்டி”(trap city) என்ற படத்தில் தான் ஜி வி பிரகாஷ் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். ஜி.வி. பிரகாஷ் படம் என்றாலே காமெடியும், கெமிஸ்ட்ரிக்கும் அளவே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த வகையில் இந்த ட்ராப் சிட்டி படமும் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ஜிவி பிரகாஷ் அவர்கள் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 13ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஜி வி பிரகாஷ் டீவ்ட்:
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், 27 வருடங்களுக்குப் பிறகு அதே நபரை சந்திக்கிறேன். அப்துல்ஹமீத் சார் என்று குறிப்பிட்டு 27 வருடங்களுக்கு முன்னால் அவருடன் எடுத்த புகைப்படத்தையும் தற்போது அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் ஏ.ஆர் ரஹ்மான் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.