மன்சூர் அலிகான் அந்த பேட்டில பண்ணத பாத்து தான் அவர வச்சி ஒரு படம் எழுதனும்னு முடிவு பண்ணேன் – லோகேஷ் சொன்ன வீடியோ.

0
270
mansoor
- Advertisement -

மன்சூர் அலிகான் குறித்து லோகேஷ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள்.

இதையும் பாருங்க : 27 வருடங்களுக்கு பின் பாட்டுக்கு பாட்டு Anchor ஐ சந்தித்த Gv – 7 வயதில் அவரை பாட வைத்துள்ள அப்துல் ஹமீத். இதோ அந்த வீடியோ.

- Advertisement -

விக்ரம் திரைப்படம்:

மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். அதோடு இந்த மாபெரும் வெற்றிக்கு கமல் படக்குழுவினருக்கு பரிசு கொடுத்து இருந்தார். இந்த நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பல பேட்டி கொடுத்து இருக்கிறார்.

லோகேஷ் அளித்த பேட்டி:

அந்த வகையில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் இடம் மன்சூரலிகான் குறித்தும், சக்கு சக்கு பாடல் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பது, கைதி படத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என்று தான் இருந்தோம். ஏன்னா, எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருடைய ஆட்டிடியூட் ரொம்ப பிடிக்கும். அவருடைய இன்டர்வியூ வீடியோ ஒன்று பார்த்தேன். ஆங்கர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.

-விளம்பரம்-

மன்சூர் அலிகான் குறித்து லோகேஷ் சொன்னது:

ஆனால், இவர் ஒரு மரத்திலிருந்து இலையைப் பறித்து பிபி ஊதி இருந்தார். நிஜமாகவே யாரும் இந்த மாதிரி பண்ணி இருக்கவே மாட்டார்கள். அதை பார்த்து நான் வியந்து விட்டேன். எப்படியாவது அவரை படத்தில் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன் என்று கூறியிருந்தார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

மன்சூர் அலிகான் திரைப்பயணம்:

இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். மேலும், மாநகரம் படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் முதன் முதலில் மன்சூர் அலிகான் தான் நடிப்பதாக இருந்தது. அவரை மனதில் வைத்து தான் லோகேஷ் ‘கைதி’ படத்தின் கதையையே எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement