ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் விவகாரத்து செய்வதாக அறிவித்து இருக்கின்றனர். கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.
அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். அதுவும் , இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.சமீப காலமாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.
தற்போது விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படம் 13. இந்த படம் ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் பிரிய இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. இதனை வதந்தியாக இருக்கும் என்றே பலரும் நினைத்தனர்.
இப்படி ஒரு நிலையில் தங்கள் விவகாரத்தை உறுதி செய்யும் விதமாக ஜி.வி.பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு நானும் சைந்தவியும் 11 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிய முடிவு செய்திருக்கிறோம். எங்களுடைய மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும், அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும்.
மிகவும் தனிப்பட்ட இந்த் மாற்றத்தின் போது எங்களுடைய பிரைவசியை மதித்து புரிந்துகொள்ளுமாறு ஊடகத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் தனித்தனியாக வளர்ந்து கொண்டிருப்பதை மனதில் கொண்டு, இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமாக காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம். நன்றி’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இதே அறிக்கையை சைந்தவியும் பதிவிட்டுள்ளார்.
ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவருமே சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு தான் கடந்த 2013ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.