ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் பிரிய இருக்கும் செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.
இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைத்து இருக்கிறார். பின் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். அதுவும் , இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
ஜி.வி. பிரகாஷ் நடித்த படம்:
சமீப காலமாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர், ஜெயில், செல்பி, அடியே படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படம் 13. இந்த படம் ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜி வி பிரகாஷ் அவர்கள் “ட்ராப் சிட்டி”(trap city) என்ற படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள்.
ஜிவி பிரகாஷ் குறித்த தகவல்:
அதன் பின் ஜிவி பிரகாஷ் அவர்கள் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் இவர் பிரபல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். அந்த வகையில் இவர் சூர்யாவின் 43 வது படம், வணங்கான், அமரன் போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் பிரிய இருக்கும் செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜிவி பிரகாஷ்- சைந்தவி குடும்பம்:
ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவருமே சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு தான் கடந்த 2013ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இருவரும் பிரிய காரணம்:
காரணம், வருடம் வருடம் சைந்தவி தன்னுடைய திருமண நாளில் ஒரு பதிவு ஒன்று போடுவார். ஆனால், இந்த வருடம் அவர் எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை, ஸ்டோரி கூட போடவில்லை. இதனை பார்த்து தான் ரசிகர்கள் பலருமே இவர்கள் இருவரும் பிரிகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில மாதங்களாகவே ஜீவி பிரகாஷ்-சைந்தவி இருவருமே ஒன்றாக இல்லை, பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. கூடிய விரைவில் இவர்கள் இருவரும் பிரிய இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.