தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமாவில் ஹீரோவாக ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். இவருடைய நடிப்பும், எதார்த்தமான பேச்சும் தான் மக்கள் மனதில் இடம்பிடிக்க வைத்தது.
நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் க.பெ.ரணசிங்கம். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியானது. இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது.
இதையும் பாருங்க : ஒரு அண்ணன் காதல் தோல்வியில், ஒரு அண்ணன் விபத்தில்- ரோட்டில் வேலை செய்து வாங்கிய சம்பளம் – ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா.
மேலும், இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தமிழ் சினிமா உலகில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ இப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஜிவி.பிரகாஷின் மனைவி பாடகி சைந்தவி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் க.பெ.ரணசிங்கம் படத்தின் போஸ்டர் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இவர் ஏற்கனவே அமலா நாகர்ஜுனாவுடன் இணைந்து ‘High Priestess’ என்ற வெப் சிரீஸில் நடித்திருந்தார். தற்போது ஜி.வி.பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ அவர்கள் வேறு ஒரு படத்தில் கூட கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.