தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பிளாக்மெயில். இந்த படத்தில் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, தேஜி அஸ்வினி, ரமேஷ் திலக் உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மாறன் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ஹீரோ ஜிவி பிரகாஷ் மெடிக்கல் குடோனில் இருந்து டெம்போவில் பொருட்களை ஏற்றி செல்லும் வேலைகளை செய்கிறார். அப்போது ஒரு நாள் அவருடைய முதலாளி முத்துக்குமார் ஒரு பார்சலை கொடுத்து டெலிவரி செய்ய சொல்கிறார். ஆனால், ஜிவி பிரகாஷ் உடைய டெம்போவுடன் பார்சல் கடத்தப்படுகிறது. இதனால் முத்துக்குமார் கோபப்பட்டு ஹீரோவின் காதலி தேஜி அஸ்வினியை கடத்தி வைத்துக்கொண்டு பார்சலை கொண்டு வர வேண்டும் என்று பிளாக்மெயில் செய்கிறார்.
என்ன செய்வதென்று புரியாமல் ஹீரோ ஜிவி பிரகாஷ் தவிக்கிறார். அப்போதுதான் அவருக்கு லிங்கா உதவி செய்கிறார். அந்த லிங்கா ஸ்ரீகாந்த் உடைய குழந்தையை கடத்தி மிரட்டி பணம் வாங்கினால் பங்கு தருவதாக சொல்கிறார். முதலில் ஜிவி பிரகாஷ் மறுத்தாலும் தன்னுடைய காதலிக்காக ஒத்துக் கொண்டு குழந்தையை கடத்த திட்டம் போடுகிறார். ஆனால் இவர்களுக்கு முன்பே குழந்தை யாரோ கடத்தி விடுகிறார்கள். கடைசியில் ஸ்ரீ காந்தியின் குழந்தையை கடத்தியது யார்? ஹீரோ தன்னுடைய காதலியை மீட்டாரா? ஜிவி பிரகாஷ் உடைய பார்சலை கடத்தியது யார்? அதற்குள் என்ன இருக்கிறது? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

படத்தில் ஹீரோ ஜிவி பிரகாஷ் மணி கதாபாத்திரத்தில் அப்பாவித்தனமான தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் ஸ்ரீகாந்த், முத்துக்குமார், லிங்கா, ரமேஷ் திலக் ரெடின் கிங்ஸ்லி எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.
ஒரு குழந்தை கடத்துவதில் ஏற்படும் குழப்பத்தை வைத்து இயக்குனர் கதையை கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், நிறைய சுதப்பி இருக்கிறார் என்று சொல்லலாம்.
ஹீரோயினியை காப்பாற்ற ஹீரோ போராடுகிறார். குழந்தை காணாமல் போன விஷயத்தில் வந்து முடிகிறது. கதை எங்கேயோ தொடங்கி எங்கேயோ கொண்டு போகிறார் இயக்குனர். முதல் பாதி குழப்பமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட கதையை முடித்து விடுகிறார்கள். சொல்லப்போனால் இரண்டு மணி நேரம் படம் ஓட வேண்டும் என்பதற்காக இந்த குழந்தை கடத்தலை வைத்து கதையை ஓட்டி இருக்கிறார் இயக்குனர். இது பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது.
இருந்தாலும் படத்தில் ஆங்காங்கே வைத்திருக்கும் ட்விஸ்ட் நன்றாக இருக்கிறது. ரெடின் கிங்ஸ்லி உடைய காமெடியும் ரசிக்கும்படியாக இருக்கிறது. திரில்லர் படம் என்று சொன்னாலும் கொஞ்சம் விறுவிறுப்பு. இரண்டாம் பாதியில் காட்டப்படும் காட்சிகள் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக தான் இருக்கிறது.

நிறை:
நடிகர்கள் நடிப்பு
இடைவெளி ட்விஸ்ட்
பின்னணி இசை
குறை:
கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம்
சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
முதல் பாதி பொறுமையாக செல்கிறது
படத்தை நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கலாம்
மொத்தத்தில் பிளாக் மெயில் - மிரட்டல் குறைவு






