கிரிக்கெட் வீரரை கேலி செய்து போட்ட பதிவை நீக்கிய Gv பிரகாஷ் – யார பத்தி என்ன போட்டி ருக்கார் பாருங்க

0
411
Gvprakash
- Advertisement -

கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ்வை கிண்டலடித்து ஜிவி பிரகாஷ் பதிவிட்டு இருக்கும் ட்வீட் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைத்து இருக்கிறார். பின் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். அதுவும் , இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

- Advertisement -

ஜி.வி. பிரகாஷ் நடித்த படம்:

கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர் படமும், ஜெயில் படமும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதன் பின் ஜிவி பிரகாஷின் நடிப்பில் வெளிவந்த இருந்த படம் செல்பி. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. தற்போது விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படம் 13. இந்த படம் ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படம்:

இதனை தொடர்ந்து ஜி வி பிரகாஷ் அவர்கள் “ட்ராப் சிட்டி”(trap city) என்ற படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். அதன் பின் ஜிவி பிரகாஷ் அவர்கள் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது ஜிவி பிரகாஷ் அவர்கள் அடியே என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக ஜிவி பிரகாஷ் டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ஜி வி பிரகாஷ் டீவ்ட்:

அதில் அவர், உலகத்தில் சிறந்த பினிசர் கேதார் ஜாதவ். அதுவும் அந்த பீல்டர்ஸ எண்ணி பார்த்து அடிக்கிற ஸ்டைல் இருக்கே வேற லெவல். சிஎஸ்கே அணிக்காக எஞ்சியுள்ள தொடர்களில் அவரைக் கேட்டனாக பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். மேலும், இது பற்றிய தகவலுக்கு நாளை 5:00 மணிக்கு ஜெயம் ரவியின் ட்விட்டர் பதிவை பார்க்கவும் என்று கூறியிருந்தார். இப்படி ஜிவி பிரகாஷின் டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் கண்டித்து இருக்கிறார்கள்.

காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேதார் ஜாதவ் விளையாடிஇருந்தார் . தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனுக்காக கேதார் ஜாதவ்வை கிண்டல் அடித்து பதிவு செய்து இருப்பது குறித்து பலரும் கண்டித்தார்கள். இதனை அடுத்து ஜிவி பிரகாஷ் தன்னுடைய ட்விட்டை டெலிட் செய்திருக்கிறார்.

Advertisement