ருத்ர தாண்டவம் படத்தை பார்த்துவிட்டு ரஞ்சித்தை விமர்சித்த எச். ராஜா. என்ன சொல்லிருக்கார் பாருங்க.

0
2004
ranjith

இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள ருத்ரதாண்டவம் படம் குறித்து பா.ஜ.க பிரமுகர் எச்.ராஜா அவர்கள் பேட்டி அளித்து உள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தாரி உட்பட பல நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ருத்ரதாண்டவம். இந்த படம் அக்டோபர் 1ம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. மேலும், இந்த படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் பட ரிலீஸ் காண வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக கவனம் செலுத்தி வருகின்றார்கள்.

அதே சமயம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, படத்தை விளம்பரப்படுத்தல் போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்புக் காட்சிகளை பாஜக பிரமுகர் எச் ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட முக்கிய பிரமுகர்கள் பார்த்து உள்ளார்களா. மேலும், படத்தை பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எச் ராஜா அவர்கள் கூறியிருப்பது, மோகன் இயக்கியுள்ள ருத்ர தாண்டவம் படத்தை பார்த்தோம். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் இல்லை மக்களுக்கு சமூகப் பிரச்சினைகளையும்,

- Advertisement -

பல உண்மை நிலைகளை புரிய வைக்கும் வழியில் இந்த படம் உள்ளது. இந்த படம் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் படிப்பில் தான் கவனம் செலுத்தவேண்டும் காதலில் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து செல்கிற விஷயத்தையும் அருமையாக இயக்குனர் கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் மதம் மாறியவர்கள், இந்து மத ஜாதி பெயரை பயன்படுத்த முடியாது என அரசியல் அமைப்பு சட்ட ரீதியாக பல விஷயங்களை இந்த படம் சொல்கிறது.

Pariyerum Perumal Special Screening Stills | New Movie Posters

பல ஆண்டுகளாக என்னை மாதிரி ஆட்கள் தெருக்கு தெரு மேடை போட்டு கத்தினாலும் சில பேருக்கு மட்டும் தான் புரியும். ஆனால், இந்த படத்தின் சமூக கருத்துக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் சென்றடையும் என்று நம்புகிறேன். இந்தப்படம் எந்த மதத்தையும் ஜாதியையும் இழிவாக பேசவில்லை. சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை மோகன் ஜி கொடுத்திருக்கிறார். மேலும், இந்த படத்தை கொடுத்ததன் மூலம் மோகன் தன்னுடைய தேசிய கடமையை செய்து உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். அவருக்கு இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement