பாடலாசிரியரின் விபூதி சர்ச்சை – ஏ ஆர் ரஹ்மானின் பதில் என்ன. எச் ராஜா கேள்வி.

0
1691
arr
- Advertisement -

ஆஸ்கார் விருதை வென்ற ஏ ஆர் ரஹ்மான் இதுவரை பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்கவில்லை. ஆனால், சமீபத்தில் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்றும் தனக்கு எதிரான கூட்டம் ஒன்று இருக்கிறதும் என்று கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் பிரபல பாடலாசிரியர் பிறைசூடன் ஏ ஆர் ரஹ்மானின் அம்மா குறித்து பெரும் சர்ச்சை ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

பாடல் ஆசிரியரான பிறைசூடன்  இதுவரை 400 திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். மேலும், இவர் ஏ ஆர் ரஹ்மானுடனும் பணியாற்றியுள்ளார்.இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள அவர் பேசுகையில், ஒரு பொது நிகழ்ச்சியில் ஏர் ஆர் ரஹ்மானை சந்தித்த போது மறுநாள் எனக்கு ஒரு பாடலுக்காக என்னை அழைத்தார்.

இதையும் பாருங்க : வைரலான கிளாமர் போட்டோ ஷூட். மிச்ச மீதி புகைப்படத்தையும் வெளியிட்ட டிடி.

- Advertisement -

அப்போது அவரின் தாய் என்னிடம் விபூதி, குங்குமம் எல்லாம் இங்கே வைக்க கூடாதுனு சொன்னாங்க. ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. நான் பிறந்ததிலிருந்தே வச்சிக்கிட்டு இருக்கேன். அதனால் யாருக்காகவும் வேஷம் போட விரும்பவில்லை என்று பிறைசூடன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஏ ஆர் ரஹ்மான் பிறப்பால் இந்து என்றாலும் அவர் விரும்பியே இஸ்லாம் மதத்தை ஏற்றார். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் அம்மா ஒரு இந்துவை இப்படி கூறியதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில் பாரதிய ஜனதா செயலாளர் எச்.ராஜா, இதற்கு A R. ரஹ்மானின் பதில் என்ன. என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement