விஜய்யை 3 முறை நேரில் சந்தித்து இத்தனை முறை கதை சொல்லி இருக்கேன், ஆனால் – வினோத் சொன்ன சுவாரசிய தகவல்.

0
646
vinoth
- Advertisement -

விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து இயக்குனர் எச் வினோத் பேசி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் பெண்களிடமும் நல்ல ஆதரவைப் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

பொங்கலுக்கு வரும் வலிமை :

இதை தொடர்ந்து தற்போது வினோத் இயக்கி இருக்கும் படம் வலிமை. இந்த படத்தையும் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அஜித் அவர்களின் வலிமை படம் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- Advertisement -

போலீசாக மாறிய பைக் ரேசர் :

மேலும், சமீபத்தில் வலிமை படத்தின் புரமோஷனுக்காக வினோத் அவர்கள் பல நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர் படம் பற்றியும் அஜித் குறித்தும் அவருடைய ரேஸ் காட்சி குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடைய ஆட்சிக்காலத்தில் பைக் ரேஸர் ஒருவர் நேரடியாக போலீசாக மாற்றப்பட்டார். அந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு தான் அஜித்தின் கேரக்டரை வலிமை படத்தில் உருவாக்கியதாகவும் அவர் பல சர்ப்ரைஸ் கூறியிருந்தார்.

vinoth

விஜய் – எச் வினோத் :

இது தல ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வலிமை படம் வெளியாக சில வாரங்கள் இருக்கும் நிலையில் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இது ஒரு பக்கமிருக்க தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் வைத்து ஒருமுறையாவது படம் இயக்கி விட வேண்டும் என்பது பல இயக்குனர்களின் கனவு.

-விளம்பரம்-

விஜய்யை சந்தித்து உள்ள வினோத் :

அதோடு இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவார்களா? என்று ரசிகர்களும் ஏக்கத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இதற்கான கேள்விக்கு இயக்குனர் வினோத் அவர்கள் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் விஜய் சாரை மூன்று முறை சந்தித்தேன். இரண்டு முறை கதை சொல்லவும் வாய்ப்பு கொடுத்தார். ஆனால், நான்தான் சொதப்பிவிட்டேன். மீண்டும் கதையை தயார் செய்துகொண்டு வாய்ப்பு கேட்பேன் என்று கூறிய தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்பு வினோத் அவர்கள் பேட்டி ஒன்றில் வலிமை படம் வேறு ஒரு நடிகருக்காக எழுதப்பட்டது. அதற்குப் பிறகு தான் அஜித் சாருக்கு ஏற்றமாரி கதையை மாற்றி எழுதினேன் என்று கூறியிருந்தார்.

வலிமை விஜய்காக எழுதிய கதையா :

இதன் மூலம் வலிமை கதை விஜய்க்கு எழுதப்பட்ட கதையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், விஜய் வலிமை படத்தை நிராகரித்து இருப்பதனால் தான் அஜித் வைத்து கதையை மாற்றி இயக்குனர் எழுதி இருக்கலாம் என்றும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. இப்படி ஒரு சூழலில் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்-வினோத் கூட்டணி அமைக்க உள்ளார். அந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதை என்றும், ஆக்சன், அதிரடி காட்சிகள் இந்த படத்தில் குறைவாக கொடுக்க இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement