சீமான் சொல்லி தான் தமிழில் இனிஷியல் போடீங்களா – எச். வினோத் சொன்ன உண்மை. இதோ வீடியோ.

0
355
Hvinoth
- Advertisement -

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு படம் கடந்த 11 ஆம் ஆண்டு வெளியானது. அதிகாலை 11 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கும் வாரிசும் வெளியானது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கியிருந்தார். அதே போல அஜித் நடித்த துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

அதோடு சோசியல் மீடியாக்களில் இவரை பற்றி அவருடைய ரசிகர்கள் கலாய்ப்பதும் அவரைப் பற்றி இவருடைய ரசிகர் கலாய்ப்பதுமாக #துணிவு #வாரிசு என சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தான் துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணையத்திலும், நேரடியாகவும் மோதுவது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

அவர் கூறுகையில் `தமிழ் சினிமாவில் 15 முன்னணி நடிகர்கள் உள்ளனர். அவர்களுடைய ரசிகர்கள் செய்யும் அளவிற்க்கு நாங்கள் 100 கோடி ருபாய் செலவழித்தால் கூட இப்படி விளம்பரம் செய்ய முடியாது. ஆனால் இந்த ரசிகர்களுக்கு படக்குழுவும், அந்த நடிகரும், தயாரிப்பு நிறுவனமும் என்ன செய்ய முடியும்? திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் கூட அதிக அளவு கடந்த சினிமா மோகம் தற்போது உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால் அது உண்மைதான்.

சினிமாவிற்க்காக இவ்வளவு நேரம் செலவிட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்றால் அதை பார்க்கலாம், மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வளவுதான் சினிமா, அதை தவிர்த்து இவ்வளவு நேரம் செலவிட வேண்டியதில்லை. நேரத்தை யாராலும் திரும்ப கொடுக்க முடியாது. உங்களுடைய நேரத்தை யாராலும் உங்களை விட பயன்படுத்தவும் முடியாது என்று பேசியிருந்தார் இதற்கு ரசிகர்கள் வெகுவாக இயக்குனர் எச் வினோத்தை பாராட்டி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இயக்குனர் வினோத் குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் நான் சொன்ன பிறகே H. வினோத் என்றிருந்த பெயரை எச். வினோத் என்று மாற்றி பயன்படுத்த ஆரம்பித்ததாக கூறினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் எச். விநோத்.

இதுகுறித்து பேசிய இருக்கும் அவர் ”ஆம் அவர் சொல்லித்தான் என்னுடைய பெயரை தமிழில் போட்டேன் எனக்கும் சீமான் அண்ணனுக்கும் பொதுவான ஒரு நண்பர் இருக்கிறார் நானும் எனது நண்பரும் சந்தித்தபோது அவருக்கு சீமான் அண்ணன் போன் செய்தார். அப்போது என்னிடம் டேய் நீ என்ன ஆங்கிலத்தில் இனிஷியல் போடுகிறார் என்று கேட்டார். அதற்கு நான் அப்படி போட்டால் யாரும் என்னை அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகிறது என்று சொன்னேன். அதற்கு அவர் யார் அவன் சொன்னது நான் பேசுகிறேன் என்று சொன்னார்.

Advertisement