கண்டிஷன் போட்டு பைக் ஸ்டாண்டி காட்சி, பல முறை புரண்டு விழுந்துள்ள அஜித், சேதமான பைக் – அடுத்தே நாளே அஜித் கொடுத்துள்ள சர்ப்ரைஸ்.

0
1269
Ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் சினிமாவை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பல துறையில் சாதனை புரிந்து வருகிறார். அதிலும் இவருக்கு மிகவும் பிடித்தது ரேஸ் தான். பெரும்பாலும் அஜித் நடிக்கும் படங்களில் பைக் ரேஸ், கார் ரேஸ் காட்சிகளை பார்க்கலாம். அதிலும் அந்த காட்சிகளில் அஜித்தே டூப் போடாமல் நடிப்பார். அந்த வகையில் தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. அதில் அதிகமாக பைக் ரேஸ் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் வலிமை படத்தில் அதிகமாக பைக் ரேஸ் காட்சிகள் இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் பல காட்சிகளில் அஜித் அவர்களே டூப் போடாமல் ஸ்டண்ட் செய்துள்ளார். இதுகுறித்து தற்போது இயக்குனர் வினோத் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஹைதராபாத்தில் புதிதாக போடப்பட்டு இன்னும் திறக்காத நெடுஞ்சாலையில் ரேசிங் காட்சிகள் ஷூட்டிங் செய்தோம். ரோடு கல்லும் மண்ணும் ஆக இருந்தது. அப்போது ஒரு டயர் வீலை பண்ணும் மாதிரி காட்சி எடுக்கப்பட்ட போது டயர் தடுமாறி அஜித் கீழே விழுந்து விட்டார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் எழுந்த பிரச்சனை, குறும்படம் போட சொன்ன அபிஷேக் (இவர யாராவது கன்ட்ரோல் பன்னுங்கள ப்ளீஸ் )

- Advertisement -

வேகமாக வந்து விழுந்ததால் அஜித் கை, கால்கள் எல்லாம் காயம் ஏற்பட்டது. நான் இரண்டு கிலோ மீட்டருக்கு தள்ளி இருந்தேன். விஷயம் கேள்விப் பட்டவுடன் அதிர்ச்சியாகி அந்த இடத்துக்குப் போனேன். அப்போது அஜித் அவர்கள் உடைந்து போன பைக்கையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் சார் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கேட்டேன். அதற்கு அவர் எனக்கு ஒன்றுமில்லை, பைக்தான் உடைந்துவிட்டது நாளைக்கு ஷூட்டிங்க்கு என்ன பண்றது என்று கேட்டார். ரைட்டிங் கியரை கழட்டிய பிறகுதான் அவருக்கு அடிபட்டிருக்கிறது என்று தெரிய வந்தது. பின் எங்களுக்கெல்லாம் கவலையாகி விட்டது. அப்புறம் அவர் யார் கிட்ட பேசினார், என்ன பேசினார் என்று தெரியாது.

ஒரு மேஜிக் மாதிரி மறுநாள் காலை அதே போல் புதிதாக 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை கொண்டு வந்திருந்தார். அவ்ளோ அடிபட்டு காயம் இருந்தும் ரைடிங் கியர் போட்டு அஜித் சார் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். நீங்க ரெஸ்ட் எடுங்க நான் டூப் வைத்திருக்கிறேன் என்று சொன்னேன். அவர் இல்லை நானே செய்கிறேன் என்று சொன்னார். அந்த அளவிற்கு பைக் ரேஸ் மீது பிரியம் உடையவர். அதுமட்டுமில்லாமல் அஜித் அவர்கள் பைக் ரேஸ் செய்யும்போது பைக் ரேஸ் கூறிய ரைட்டிங் கியர் அணிந்தும், ஹார்ன் பயன்படுத்தக்கூடாது என்றும் சொல்லுவார். ஏனென்றால் அந்த ஹார்ன் சத்தம் குழந்தைகளையும், பெரியவர்களையும் பாதிக்கும் என்றும் ஒரு நல்ல டிரைவர் அதிகமாக ஹார்ன் பயன்படுத்த மாட்டார் என்றும் சொல்லுவார்.

-விளம்பரம்-
Advertisement