450 வருட பழைமையான மாளிகையில் வான வேடிக்கையுடன் முடிந்த ஹன்சிகாவின் திருமணம். வைரலாகும் வீடியோ இதோ.

0
550
hansika
- Advertisement -

சினிமாவில் குட்டி குஷ்பூ என்று அழைக்கப்படும் நடிகை ஹன்சிகா மோத்வானி சோஹைல் கதுரி என்பவரை திருமணம் செய்யவிருக்கும் நிலையில் அவர்களின் புகைப்படமானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஷக்கலக்கா பூம் பூம் என்ற சீரியலின் மூலம் ஹன்சிகா அவரது திரைப்பயணத்தைத் தொடங்கினார். இந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ, போன்ற சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்திருப்பார்.

-விளம்பரம்-

நடித்த படங்கள்:

பின்னர் நடிகர் அல்லு அர்ஜின் நடித்திருந்த தெலுங்கு படமான “தேசமுதுரு” என்ற மூலம் வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாக்கினார். அந்த பின்னர் பல படங்களில் நடித்த நடிகை ஹன்ஷிகா நடிகர் தனுஷ் நடித்திருந்த “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக்கினார். அதன் பின் வேலாயுதம், எங்கேயும் காதல், பிரியாணி, ஆம்பள, புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, ரோமியோ ஜூலியட், போகன்,குலேபகாபலி மான் கராத்தே, அரண்மனை 1 மற்றும் 2 ,என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.

- Advertisement -

சிறிய இடைவெளி :

தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்து வந்த ஹன்ஷிகா மோத்வானி நடிகர் விக்ரம் பிரபு நடித்திருந்த துப்பாக்கி என்ற திரைப்படத்தில் 2018ஆம் ஆண்டு கடைசியாக நடித்திருந்தார். பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைபடத்தில் நடிக்காமல் இருந்த ஹன்ஷிகா தற்போது “மஹா” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்புவுடன் நடித்திருந்தார். இந்த படமானது இவரின் 50வது படமாகும். பெரிய எதிர்பார்ப்புகளுடன் தயாரிக்கப்பட்ட இப்படமானது அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்க வில்லை.

திருமணம் :

இந்நிலையில் தான் ஹன்ஷிகா மோத்வானியின் நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள போவதாக ஷோசியல் மீடியாவில் கூறியிருந்தார். இவரக்ள் 2020ஆம் ஆண்டிலிருந்தே ஆண்டிலிருந்தே தொழில் கூட்டாளியாக இருவரும் இருந்து வரும் நிலையில் இன்று 4ஆம் தேதி இவர்களது திருமணமானது 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் நடக்கவிருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கான கொண்டாட்டம் 3 நாட்களுக்கு முன்னராகவே தொடங்கிவிட்டது. இதில் நடந்த மெஹந்தி நிகழ்ச்சிகள் என பல கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. அதோடு இதில் நடந்த இசை கச்சேரியில் நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹைல் இருவரும் மணக்கோலத்தில் ஒன்றாக இசைக்கு ஏற்றவாறு உற்ச்சாகத்துடன் நடனமாடியது இணையத்தில் வைரலாகியது.

இதனை தொடர்ந்து கோலோ போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதில் திருமணமாகும் இருவரின் குடும்பத்தினரும் கலந்துகொண்டிருந்தனர். அதோடு இந்த போட்டியை காணவந்த ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹைல் வெண்ணிற ஆடையில் வந்திருந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணமானது ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டையில் இன்று மாலை நடக்கிறது, இதற்கு முன் காலையில் ஹல்தி விழா நடந்தது இதில் இரு வீட்டார் குடும்பத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள இருக்கும் சோஹைல் கதுரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். மேலும், இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவர் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ரிங்கி, இவர் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியும் கூட. சோஹைல் கதுரியா மற்றும் ரிங்கியின் திருமணம் படு கோலாகளமாக நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement