நெருங்கிய தோழியின் கணவரை திருடினேனா ? – முதல் முறையாக மனம் திறந்த ஹன்சிகா.

0
743
hansika
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார். அதன் பின் இவர் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை 1,2 , ரோமியோ ஜூலியட், போகன்,குலேபகாபலி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.இவர் சிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தவில்லை. பின் சிம்பு-ஹன்சிகா காதல் பிரேக் அப் ஆனது.

-விளம்பரம்-

அதை அடுத்து நடிகை ஹன்சிகா நடன புயல் பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தது.ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாமல் இருந்தது. இப்படி ஒரு நிலையில் நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை தான் ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகா திருமணம் செய்துகொண்ட நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது.

- Advertisement -

இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்று இருக்கிறது.அவர் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ரிங்கி, இவர் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியும் கூட. சோஹைல் கதுரியா மற்றும் ரிங்கியின் திருமணம் படு கோலாகளமாக நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது. ஆனால், பின்னர் ரிங்கியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுஹைல் அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

இளம் வயதில் ஹன்சிகா ஏன் விவகாரத்து ஆன ஒருவரை திருமணம் செய்துகொண்டார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. மேலும் ஹன்சிகா தனது தோழியின் கணவரை “திருடினார்” என்று கடுமையாக கேலி செய்யப்பட்டார்.அனால், ஹன்சிகாவும் இதுகுறித்து பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்த ஹன்சிகா, தற்போது முதன்முறையாக அதுகுறித்து மனம்விட்டு பேசி உள்ளார்.

-விளம்பரம்-

நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில்இன்று வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான அதற்கான டீசரில், ஹன்சிகா தனது அம்மாவிடம் பேசும்போது, நீ தான் எனக்கு அடிக்கடி சொல்லி இருக்கிறாய். யாருடைய கடந்த காலத்தை பற்றி பார்க்கக் கூடாது என்று உனக்கு ஓகே என்றால் எனக்கு அது போதும் என்று கண்கலங்கியபடி ஹன்சிகா பேசியுள்ளார். இதில் சோஹைல் கத்தூரியாவின் கடந்த காலத்தை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பதை ஓப்பனாக சொல்லி இருக்கிறார் ஹன்சிகா.

ஒரு பொது நபராக, ஒருவரை விரல்களை சுட்டிக்காட்டுவது மற்றும் ஒருவரை மோசமாக உணர வைப்பது மிகவும் எளிதானது.அதற்கான விலையை இப்போது நான் கொடுக்கிறேன். சொஹைல் அவரது மனைவியை பிரிவதற்கு நான் தான் காரணம் என்று சொல்வது முற்றிலும் ஆதாரமற்றது. மேலும், இதுகுறித்து

ஒரு பொது நபராக, ஒருவரை விரல்களை சுட்டிக்காட்டுவது மற்றும் ஒருவரை மோசமாக உணர வைப்பது மிகவும் எளிதானது.அதற்கான விலையை இப்போது நான் கொடுக்கிறேன். சொஹைல் அவரது மனைவியை பிரிவதற்கு நான் தான் காரணம் என்று சொல்வது முற்றிலும் ஆதாரமற்றது. மேலும், இதுகுறித்து சொஹைல் கூறுகையில் ‘நான் 2014 இல் முதல் முறையாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால்,, எங்கள் திருமண வாழ்க்கை குறைவாக இருந்தது. நாங்கள் இப்போது நண்பர்கள் மட்டுமே என்று கூறியுள்ளார்.

Advertisement