‘என்னை கவின் என்று நினைத்து’ தர்மசங்கடத்துக்கு உள்ளாகியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகர்.

0
12782
kavin
- Advertisement -

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்தவர் நடிகர் கவின். இவர் படிக்கும்போதே ஆர்ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார். சினிமா துறை மீது இருந்த ஆர்வத்தினால் முதலில் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த குறும்படங்களின் மூலமாக தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் தான் கவின் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு பின் கவின் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பையுயும், அன்பையும் பெற்றார்.

Vignesh Karthick (Actor) Profile with Age, Bio, Photos and Videos

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தான் கவினுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. இவர் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் கவினுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது.

இதையும் பாருங்க : இப்படி ஒரு முக்கியமான நாளை குழந்தைகளின் உதவியோடு கொண்டாடியுள்ள ரம்பா. உருக்கமான வீடியோ.

- Advertisement -

இந்நிலையில் கவின் ரசிகர்களால் பிரபல நடிகர் ஒருவர் தர்மசங்கடத்திற்கு ஆளாகிய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க விஜய் டிவி நடிகர் விக்னேஷ் கார்த்திக் தான். விக்னேஷ் கார்த்திக்கும் வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து இவர் நிறைய குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அதற்கு பிறகு தான் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக ஆனார். இவர் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்னேஷ் கார்த்தியிடம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி கேட்டு வந்து உள்ளார்கள். அதில் ரசிகர் ஒருவர் உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது தர்மசங்கடமான நிகழ்வு நடந்து உள்ளதா? அதை குறித்து கூறுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதையும் பாருங்க : இந்த நடிகர் என் சித்தப்பா தான். போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த ரம்யா பாண்டியன். அட முக ஜாடை கூட ஒண்ணா இருக்கே.

-விளம்பரம்-

அதற்கு விக்னேஷ் கார்த்திக் கூறியது, இந்த மாதிரி எனக்கு நிறைய இடங்களில் நடந்து இருக்கிறது. கவினும்,நானும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் பல பேர் என்னை பார்ப்பது கவின் என்று நினைத்து போட்டோ எடுக்கலாம், ஆட்டோகிராப் போடுங்கள் என்று கேட்பார்கள். அதனால் சில நேரங்களில் நான் தர்ம சங்கடத்துக்கு உள்ளாகி உள்ளேன் என்று கூறினார். கவினும், விக்னேஷ் கார்த்திக்கும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கிறார்கள். இது குறித்து பலர் இவர்கள் இருவரும் அண்ணன் தம்பியாக இருப்பார்களா? என்று கூட சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது.

விக்னேஷ் கார்த்திக் பதிவிட்ட டீவ்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் விக்னேஷ் கார்த்திக் நடிகர் ஆனார். அதற்கு பிறகு இவர் நட்பதிகாரம் 79, சோல பொறி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் குறும் படங்களில் நடித்து கொண்டும்,நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

Advertisement