திருமண கொண்டாட்டத்தில் வருங்கால கணவருடன் ஹன்சிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார். அதன் பின் இவர் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை 1,2 , ரோமியோ ஜூலியட், போகன், குலேபகாபலி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும், இவர் தமிழில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் இணைந்து துப்பாக்கி முனை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின் இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இடையில் இவர் சிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தவில்லை. பின் சிம்பு-ஹன்சிகா காதல் பிரேக் அப் ஆனது. அதை அடுத்து நடிகை ஹன்சிகா நடன புயல் பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில வதந்திகள் வெளியாகி இருந்தது.
ஹன்சிகா திரைப்பயணம்:
கடைசியாக இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் மஹா. இந்த படம் மாபெரும் தோல்வி அடைந்தது. இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும், இது ஹன்சிகாவின் 50-வது படமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ஹன்சிகா வசம் எந்த படமும் இல்லாததால் இவர் பார்ட்டி, கிளப் என தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றி சந்தோசமாக என்ஜாய் பண்ணி கொண்டு இருந்தார்.
ஹன்சிகா திருமணம்:
இப்படி ஒரு நிலையில் ஹன்சிகா திருமணம் குறித்த செய்தி சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதாவது, நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை தான் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர்கள் இருவருமே சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஈவென்ட் மேனேஜ்மென்ட்டையும் நடத்தி வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து இவர்கள் காதலிப்பது உறுதியானது. மேலும், இது குறித்து சமீபத்தில் கூட ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு போட்டு இருந்தார்.
திருமணம் குறித்த தகவல்:
அதில், சோஹைல் கதுரியா ஈபிள் டவர் அருகில் நின்று கொண்டு தன் காதலைத் தெரிவிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்து இருந்தார். இந்த கண்ட ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஹன்சிகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும், வருகிற டிசம்பர் நான்காம் தேதி ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டு கால பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெற இருக்கிறது.
குத்தாட்டம் போட்ட ஹன்சிகா :
இந்நிலையில் திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. பாரம்பிய முறைப்படி ஹன்சிகாவின் திருமண சடங்குகள் தொடங்கி இருக்கிறது. நேற்று மட்டா கி சவுகி என்ற சடங்கு நடந்தது. அதில் தன்னுடைய வருங்கால கணவருடன் ஹன்சிகா எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதே போல தன் வருங்கால கணவருடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.