மீண்டும் செல்பி புகைப்படத்தை பதிவிட்ட ஹன்சிகா.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

0
431
hansika

ஹன்சிகா மோத்வானி தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மும்பையை சேர்ந்த இவருக்கு தற்போது 27 வயதாகிறது. தமிழுக்கு முன்னாள் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். விரைவில் இவரது நடிப்பில் ‘மஹா’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு ஹன்சிகாவின் சில அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தனது போன் ஹாக் செய்யப்பட்டு அந்த புகைப்படங்கள் வெளியாகி விட்டது என்று ஹன்சிகா தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ஹன்சிகா சமூக வளைத்தளத்தில் இருந்து விமர்சனங்களில் இருந்து தப்பிக்கவே இப்படி போலி சாக்கு சொல்கிறார் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர். இதனால் சிறிது காலம் சமூக வலைதளத்தில் இருந்து விலகி இருந்தார் ஹன்சிகா.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா சமீபத்தில் தனது நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்கு சென்றுள்ளார். அதற்கு முன்பாக கண்ணாடி முன்பு நின்றுகொண்டு செல்ஃபீ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இது போன்ற செல்பி எடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ஹன்சிகா மீண்டும் இதோபோன்ற புகைப்படத்தை எடுப்பதை நிறுத்தவில்லையா என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.