மெர்சல் மருத்துவமனை காட்சி போல் வீடியோ வெளியிட்ட ஆர்த்தி – எச்சரித்த விஜய் ரசிகர்கள்

0
4345
Harathi
- Advertisement -

சமீப காலமாக பிரபலமானவர்களை சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சித்து தானும் பிரபலம் அடைவது ட்ரெண்டாக உள்ளது. முன்னர் பல படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் மூலம் மிகப் பிரபலம் அடைந்தவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி.
 Harathi
இவர் தன்னை ‘தல’ ரசிகையாக காட்டிகொண்டு, தளபதி விஜயை நேரடியாகவே விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் விஜய் ரசிகர்களுக்கும் இவருக்கும் இப்படி ஒரு மோதல் ஏற்ப்பட்டது. பின்னர் தன்னை விஜய் அழைத்து பேசியதாகவும், அவரை பார்த்ததாகவும் ட்வீட் செய்திருந்தார். அதனையும் விட்டு வைக்காத விஜய் ரசிகர்கள் என்ன பல்டி அடித்துவிட்டீர்கள் என கலாய்த்து வந்தனர்.

இதையும் படிங்க:
‘மெர்சல்’ படத்தில் விஜயின் அம்மாவா நடிச்ச அனுபவம் பற்றி கோவைசரளா !

-விளம்பரம்-

அதனையும் தாண்டி தற்போது, மெர்சல் படத்தில் கூறியது போல் மருத்துவமனையில் அலட்சியத்தால் நடந்த ஒரு விபரீத வீடியோவை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், மெர்சல் படத்தில் வந்தது போல் இதிலும் நடந்திருக்கிறது எனக் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

இதனைப்பார்த்த விஜய் ரசிகர்கள் விஜய்க்கு ஐஸ் வைத்து பட வாய்ப்பிற்க்காகவா இது என கேட்கிறார், மேலும் ஒருவர் இது பழைய வீடியோ என பதிலளிக்கிறார்.
mersal
அந்த ரசிகரின் ட்வீட்டிற்கு பதிலளித்த ஆர்த்தி
‘இது பழசோ புதுசோ ஆனால் உண்மை சம்பவம்’ என் அம்மாவிற்கும் டையாலிசிஸ் செய்தோம், டாக்டர்கள் கடவுள் போன்றவர்கள், . கடவுளான மருத்துவர்கள் காக்கட்டும். என பதிலளிக்கிறார்

இதனைப் பார்த்த மற்றொரு ரசிகர், ‘பார்த்து ட்வீட் போடுங்க ரைடு வந்துர போராங்க’ என நக்கல் அடிக்கிறார். உடனடியாக பதில் கூறும் ஆர்த்தி, ‘எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை’ எனக் கூறுகிறார். அவர் ஏதாச்சையாக கூறினாரா ,இல்லை சென்ற வருடம் விஜய் வீட்டில் நடந்த இன்கம் டேக்ஸ் ரைடை வைத்து உங்களுக்கு தான் பயம் என்று கூறுகிறாரா? என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

-விளம்பரம்-

ஆனால், ஒன்று மட்டும் நிதர்சனம், அவர் விஜய் ரசிகர்களை மீண்டும் ஏதோ ஒரு வகையில் சீண்டுகிறார்.

Advertisement