இந்தியா முழுவதும் ஆயுத பூஜை, விஜயதசமி முன்னிட்டு பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அதில் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
வீரருமான ‘ஹர்பஜன் சிங்’ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இப்போது உள்ள விஜயதசமி வாழ்த்துக்கள் ட்ரெண்டிங்கில் ஹர்பஜன் சிங் அனுப்பிய வாழ்த்து தான் செம ஹிட்டாக உள்ளது. அவர் விஜய், அஜித் அவர்களின் படங்களை வைத்து மக்களுக்கு விஜயதசமி வாழ்த்துக்களை அறிவித்திருந்தார். ஹர்பஜன் சிங் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்தவுடன் தமிழ் ஸ்டேட்டஸ் வைத்தால் போதும் ஒரு புத்தகமே போட்டுடலாம் அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.ஏன்னா,அந்தளவுக்கு சி எஸ் கே அணிக்காக விளையாட ஆரம்பித்து விட்டார் என்று சொல்லலாம்.

அதனால் தான் தமிழ் ரசிகர்கள் அதிகமாகி உள்ளனர்.முதல்ல எல்லாம் ஹர்பஜன் சிங் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கருத்துக்களை இணையங்களில் தெரிவித்து வந்திருந்தார். அதற்கு பின் பல விஷயங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் தசரா பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்கள் அஜித்தின் நேர்கொண்ட பார்வையும், விஜயின் பிகில் படத்தையும் ஒன்றாக இணைத்து தூள் கிளப்பும் ஸ்டேட்டஸை ட்விட்டரில் போட்டுள்ளார்.ஹர்பஜன்சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது,

Advertisement

ஆரம்பிக்கும்போதே துர்கை அம்மன் துணை என்றுதான் ஆரம்பித்தார்.இந்த பண்டிகை உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையும் அவ்வளவு எளிதானது அல்ல என்பதை உணர்த்துகிறது.மேலும், அல்டிமேட் ஸ்டார் தல அவர்களின் வெற்றி நடை போட்ட நேர்கொண்ட பார்வை படத்தை பற்றியும், தீபாவளி அன்று வரவிருக்கும் தளபதி விஜய்யின் பிகில் படத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அஜித் அவர்கள் நேர்கொண்டபார்வை படத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகளை அடக்கி , அதர்மங்களை ஒழிக்கவும், பெண்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் இருந்ததாகவும் கூறினார்.பின் ” பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்” எழுந்து வாருங்கள் என்று தளபதி விஜயின் பிகில் பட “சிங்கப் பெண்ணே, சிங்கப் பெண்ணே” என்ற பாடல் உள்ளது என கூறியிருந்தார்.

மேலும் அனைவருக்கும் என் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் என்றும் கூறியிருந்தார். தற்போது இந்த ட்விட்டர் தான் இணையங்களில் ஹிட்டாகி வருகிறது.இப்ப உள்ள நவீன உலகம் பாரதியார் கண்ட புதுமைப்பெண் கேற்றவாறு மாறிக்கொண்டு வருகிறது என்பது அனைவரும் தெரிந்ததுதான். பெண்களை கடவுளாகவும், ஒரு குடும்பத்தின் தலைவியாகவும் மதித்து போற்றப்படும் உலகமாக மாறி வருகிறது. மேலும்,ஹர்பஜன் கருத்து குறித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்நெட்டிசன்கள்.

Advertisement

அப்படி என்ன இந்த விழாவில் சிறப்புன்னு பார்த்த !நவராத்திரி திருவிழா என்றாலே முக்கியமான நிகழ்வு மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்வு தான். அப்படி சூரனை வதம் செய்யும் அம்பிக்கைகளின் ஆயுதங்களுக்கு பூஜை செய்து கொண்டாடுவதுதான் இந்த ஆயுத பூஜை. மேலும் இதில் வெற்றியடையும் அம்பிக்கைகளுக்கு கொண்டாடும் விதமாக ஆயுத பூஜையும், விஜயதசமியும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் விழாக்களாகும். இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று.பெண்களின் வீரத்தையும் பெருமையையும் போற்றப்படும் வகையில் கொண்டாப்படும் விழாக்களாகும் உள்ளது என்று கருத்துக்களை தெரிவித்தனர் நெட்டிசன்கள்.

Advertisement
Advertisement