தமிழில் அமலாபால் அறிமுகமான ‘சிந்து சமவெளி’ படத்தில் ஒரு கல்லூரி இளம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்த படம் சர்ச்சைகளுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் ஹரிஷ் கல்யாண் ஒரு பிரபலத்தை ஏற்படுத்தித் தரவில்லை என்பதே உண்மை.
ஆனால், விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றதன் மூலம் பரவால்ல பிரபலத்தின் உச்சிக்கே சென்றார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமும் ஆர்மியும் உருவானது.
அதன் பின்னர் இவர் பிக் பாஸ் ரைசாவுடன் நடித்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹரிஷ் கல்யாண் அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் live chat செய்வது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடிக் கொண்டிருந்தார் அப்போது ரசிகர் ஒருவர் ஹரிஸ் கல்யாணிடம் பிராமின் ஆக இருந்து கொண்டு அசைவம் சாப்பிடுகிறீர்களே என்று கேள்வி கேட்டுள்ளார்
அதற்கு சற்றும் கோபப்படாமல் சாதுர்யமாக பதிலளித்த ஹரிஷ் கல்யாணம் நான் ராமின் என்று இப்போது சொன்னேன். கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று அல்லா நாமம் சொல்லுவேன்’ என்று எம்மதமும் சம்மதம் என்பது போல அந்த ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.