தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டீசல். இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அதுல்யா ரவி, வினய், சாய்குமார், சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் 1979 காலகட்டத்தில் நடக்கிறது. அப்போது வடசென்னையில் கடலோர பகுதியில் மீனவ மக்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி கச்சா எண்ணெய் குழாய் கொண்டுவரப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதால் சாய்குமார் உடைய நண்பர்கள் இருவர் உயிரை விடுகிறார்கள். பின் சாய்குமார் கச்சா எண்ணெய் திருடி விற்று அதில் வரும் பணத்தில் மக்களுக்கு தேவையானதை எல்லாம் செய்து கொடுக்கிறார்.
பின் காலங்கள் செல்லச் செல்ல 2014இல் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க தலைவராக சாய்குமார் உருவாகினார். அவருடைய வளர்ப்பு மகனாகத்தான் ஹரிஷ் கல்யாண் இருக்கிறார். இவர் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து கச்சா எண்ணையை சரியான முறையில் பிராசஸ் செய்து தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கிறார். பின் அங்கிருந்து பெட்ரோல் மற்றும் டீசலாக கொண்டு வந்து பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பும் வேலையெல்லாம் செய்கிறார்.

இவர்களுக்கு தொழில் ரீதியாக பிரச்சனை செய்பவர்கள் விவேக் பிரசன்னா. இவர்கள் வடமாநிலத்தில் இருந்து வரும் சாய்குமார் உடைய பெட்ரோல், டீசல் லாரிகளிலிருந்து பாதியை திருடி கலப்படமாக மாற்றுகிறார்கள். இதற்கு போலீஸ் அதிகாரியான வினயும் துணையாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த திருட்டு கும்பலை ஹரிஷ் கல்யாண் கண்டுபிடிக்கிறார். அப்போது குழாயிலிருந்து எண்ணெய் எடுக்க தனக்கும் அனுமதி வேண்டும் என்று சங்கத்தில் விவேக் பிரசன்னா கேட்கிறார்.
அப்போது வினய்க்கும், ஹரிஷ் கல்யாணுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதற்கு பின் ஹரிஷ் கல்யாண் தலைமறைவாக இருக்கிறார். விவேக் வினய் இருவரும் சேர்ந்து பல சதிகளை எல்லாம் செய்கிறார்கள். இதை தெரிந்த ஹரிஷ் கல்யாண் அனைத்தையும் எப்படி சரி செய்தார்? கச்சா எண்ணெய் குழாயினால் அவஸ்தைப்படும் மக்களின் பிரச்சினை எப்படி தீர்ந்தது? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. ரொம்ப சென்சிட்டிவான கதையை இயக்குனர் தன்னுடைய முதல் படத்திலேயே கையாண்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
மீனவ மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, கச்சா எண்ணெய்யை வைத்து நடக்கும் அரசியல், மீன் பிடிப்பதில் ஏற்படும் பிரச்சனை என பல விஷயங்களை ஒரே படத்தில் சொல்லி இருக்கிறார். ஒரு மாஸ் ஆக்சன் படம். இதை ஹரிஷ் கல்யாண் தன்னுடைய நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டை, எமோஷனல், ரொமான்ஸ் என அனைத்துலையுமே தன்னுடைய சிறப்பான பங்களிப்பை ஹரிஷ் கல்யாண் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் ஹரிஷ் கல்யாண் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஒரு மாஸ் ஹீரோவாகவே படம் முழுக்க ஹரிஷ் கல்யாண் இருக்கிறார் என்று சொல்லலாம். வடசென்னை படத்தில் வரும் பிரச்சனை போல் முதல் பாதி, இரண்டாம் பாதி கத்தி படத்தை போலிருக்கிறது. கதாபாத்திரங்கள் எல்லாம் அப்படித்தான் இயக்குனர் வடிவமைத்திருக்கிறார். இருந்தாலும் நடிகர்கள் தங்களுடைய நடிப்பின் மூலம் சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக, வில்லனாக வரும் வினய் தன்னுடைய மேனரிசத்தின் மூலம் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம்.
இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முதல் பாதி வேகமாக போனாலும் இரண்டாம் பாதி கொஞ்சம் பொறுமையாக செல்கிறது. இருந்தாலும் கிளைமாக்ஸை இயக்குனர் ஜட்டு வேகத்தில் கொண்டு சென்றார். படத்தினுடைய பிளஸ் வசனங்கள் தான். ஒவ்வொரு வசனங்களும் நன்றாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒளிப்பதிவு, பின்னணி இசை எல்லாமே படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. இருந்தாலும் படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கிறது. மொத்தத்தில் இந்த தீபாவளிக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கும் படமாக டீசல் இருக்கிறது.
நிறை:
கதைக்களம்
ஹரிஷ் கல்யாண் நடிப்பு
பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்
நடிகர்கள் எல்லோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
கிளைமாக்ஸ் அருமை
முதல் பாதி சூப்பர்

குறை:
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
இரண்டாம் பாதி பொறுமையாக செல்கிறது
திரைக்கதையை கொஞ்சம் நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கலாம்
மொத்தத்தில் டீசல் - ஆக்சன்






